உலகே வியக்கும் படி திருமணத்தில் புரட்சி செய்த 5 சூப்பர் ஜோடிகள்!

Posted By:
Subscribe to Boldsky

திருமணம் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என கூறுவார்கள். அதே திருமணத்தை புவியிலே சொர்கமாக அமைத்துக் கொள்வது அவரவர் எண்ணத்திலும், வாழும் விதத்திலும் தான் இருக்கிறது.

திருமணம் என்பது பெரும்பாலான்வர்களின் வாழ்வில் ஒருமுறை தான் நடக்கிறது. எனவே, அதை சிறப்பாக, தங்களால் முடிந்த வரை தாங்கள் விரும்பியப்படி செய்துக் கொள்ள வேண்டும் என்பதே பலரின் விருப்பம்.

ஆனால், மற்றவரை பற்றியும் நினைத்து, மற்றவர் நலன் கருதி, திருமண செலவு மொத்தத்தையும் சமூக நலனுக்கு அளிப்பதற்கும் ஒரு பெரிய மனம் வேண்டும். அந்த பெரிய மனம் படைத்த சூப்பர் ஜோடிகள் இவர்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அபய் - ப்ரீத்தி!

அபய் - ப்ரீத்தி!

அமராவதியை சேர்ந்த அபய் மற்றும் ப்ரீத்தி தம்பதியினர் தங்கள் திருமணத்தை எளிமையாக முடித்துக் கொண்டு, பத்து விவசாய குடும்பங்களுக்கு தலா இருபதாயிரம் நன்கொடை கொடுத்து உதவினர்.

சமந்தா ஜாக்சன் - பாஸின்!

சமந்தா ஜாக்சன் - பாஸின்!

அழுதப்படி இருந்த ஒரு சிறுவனின் புகைப்படத்தை கண்ட இந்த ஜோடி, தங்கள் திருமண ஏற்பாடுகளை நிறுத்தி, அந்த மொத்த தொகையை சிரிய அகதிகளுக்கு நன்கொடையாக தந்துவிட்டனர். இவர்கள் மொத்தம் $17,500 அளித்து உதவினர்.

ஆதித்தியா திவாரி!

ஆதித்தியா திவாரி!

இந்த செய்தி இந்தியாவின் முதல் இளம் தந்தை என்ற தலைப்புடன் பிரபலம் ஆனது. இவர் ஒரு குழந்தையை தத்தெடுத்து திருமணம் செய்தார். தனது திருமணத்திற்கு வீடுகள் இல்லாதவர்கள், உதவியற்ற குழந்தைகள், தெரு நாய்கள், விலங்கியல் பூங்கா விலங்குகளை அழைத்து நடத்தினார். அனைவருக்கும் உணவளித்து மகிழ்வித்தார்.

துருக்கிய தம்பதி!

துருக்கிய தம்பதி!

Fethullah Üzümcüoğlu and Esra Polat எனும் இந்த தம்பதியர் நான்காயிரம் சிரிய அகதிகளுக்கு உணவளித்து திருமணம் செய்துக் கொண்டனர்.

மத்திய பிரதேச தம்பதி!

மத்திய பிரதேச தம்பதி!

மத்திய பிரஷேசத்தை சேர்ந்த பிரியங்கா - ரவி தம்பதி 10,000 மரக்கன்றுகளை நட்டு திருமணம் செய்துக் கொண்டனர். திருமண விருந்தினர்களுக்கும் மரக்கன்றுகளை பரிசாக அளித்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Five Super Couples Who Spent Their Wedding Funds On Social Causes

Five Super Couples Who Spent Their Wedding Funds On Social Causes
Please Wait while comments are loading...
Subscribe Newsletter