தமிழ் கேர்ள்ஸ்: மாடர்ன் vs ட்ரெடிஷனல் - ஒரு சின்ன சர்வே!

Posted By: Staff
Subscribe to Boldsky

வட இந்தியா vs தென் இந்தியா பெண்களுக்கு மத்தியில் சிலபல வேற்றுமை, ப்ளஸ், மைனஸ் இருப்பதை போலவே, நம்ம தமிழ் நாட்டு கலாச்சாரத்தில் பிறந்து, வளர்ந்திருந்தாலும், ஃபேஷன் vs அடக்க ஒடுக்கமான பெண்கள் என் இரு பிரிவாக நம் தமிழ் பெண்களை பிரித்து காண முடியும்.

எப்படி வட இந்தியா vs தென் இந்தியா பெண்கள் பற்றி கலந்தாய்வு செய்த போது ப்ளஸ், மைனஸ் கூறினார்களோ, அதே போல ஃபேஷன் vs ட்ரெடிஷனல் தமிழ் பெண்கள் என பேசும் போதும், இருவரும், இருவர் மீதும் வெவ்வேறு கருத்துக்கள் வைத்துள்ளனர்.

சிம்பிளாக கூற வேண்டும் என்றால், எப்படி வட இந்தியா vs தென் இந்தியா பெண்கள் பற்றி பேசுவது காவிரி நீர் பிரச்சனை கலந்து ஆலோசிப்பது போல இருந்தது. தமிழ்நாட்டு ஃபேஷன் vs ட்ரெடிஷனல் பெண்கள் பற்றி பேசுவது நம்ம தெரு குழாயடி சண்டை பிரச்சனை பற்றி பேசியது போல இருக்கிறது.

மற்றபடி, இருவரும், இருவர் மீதான ப்ளஸ், மைனஸ் என்னென்ன? அவர்கள் மீதான பொதுவான பார்வை எப்படி இருக்கிறது என பல விஷயங்கள் கூறியுள்ளனர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உள்ளே வெளியே!

உள்ளே வெளியே!

ட்ரெடிஷன் பெண்களாக இருந்தாலும், அவர்கள் உள்ளே ஒரு மாதிரி, வெளியே ஒரு மாதிரி இருப்பார்கள். எல்லாரையும் இன்னசன்ட் என்று கூற முடியாது. சிலர் முகத்திற்கு நேரே ஒரு மாதிரியும், முதுகிற்கு பின்னே ஒரு மாதிரியும் பேசுவார்கள்.

சமாளிச்சிபிகேஷன்!

சமாளிச்சிபிகேஷன்!

ஃபேஷன் பெண்கள் தங்களுக்கு ஒரு விஷயம் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், தெரிந்தது போல பேசி, பூசி முழுகி எளிதாக சமாளித்து விடுவார்கள்.

எங்க வீட்டு பொண்ணு!

எங்க வீட்டு பொண்ணு!

ட்ரெடிஷன் தோழிகளின் வீட்டிற்கு சென்றால், தங்களையும் அவர்கள் பெண்ணை போலவே பார்த்துக் கொள்வார்கள். சாப்பிட் சொல்வதில் இருந்து, தலையில் பூ வைத்துவிடுவது வரை பல விஷயங்கள் இது பற்றி கூறலாம்.

தைரியம்!

தைரியம்!

சிட்டி பெண்களிடம் அதிக தைரியம் இருக்கும். வெளிப்படையாக நடந்துக் கொள்வார்கள். தான், தன் வாழ்க்கை, தனது பாதையில் சரியாக இருப்பார்கள்.

தப்பு கணக்கு!

தப்பு கணக்கு!

ஒரு பெண் மாடர்னாக இருந்தால், உடனே அந்த பெண் தவறானவள், அவரது நடவடிக்கை, குணாதிசயங்கள் தவறாக தான் இருக்கும் என கணக்கு போட்டு விடுவார்கள்.

கூச்சமா இருக்கிறதா?

கூச்சமா இருக்கிறதா?

தாங்கள் வீட்டினுள் தனியாக இருக்கும் போதே உடுத்த கூச்சப்படும் உடைகளை, எப்படி அவர்கள் வீட்டில் அப்பா, அம்மா முன்னே போட்டுக் கொண்டு, வெளியேவும் வருகிறார்கள் என்ற கேள்வி எழும்.

இன்னசன்ஸ்!

இன்னசன்ஸ்!

சில ட்ரெடிஷன் பெண்கள் நிஜமாகவே வெகுளியாக இருப்பார்கள். வெகுளியாக நடந்துக் கொள்வார்கள். சில சமயங்களில் சிரிப்பு வந்தாலும், அவர்கள் உண்மையாக நடந்துக் கொள்கிறார்கள். அது நல்ல விஷயம்.

தேடி செல்வது...

தேடி செல்வது...

காதணி, செருப்பு, உடை, உணவு, மேக்கப் பெருட்கள் என எதுவாக இருந்தால், இந்த பிரான்ட் தான் வேண்டும், இந்த ஃப்ளேவர் தான் வேண்டும் என தேடி செல்வார்கள். அதிக செலவு செய்வார்கள். இது அநாவசியமாக தெரிகிறது.

தங்கம்!

தங்கம்!

ட்ரெடிஷன் வீடுகளில் கால் கிராமாக இருந்தாலும் அது தங்கமாக இருக்க வேண்டும் என எண்ணுவார்கள். அவர்களுக்கு தங்கத்தின் மீது அலாதி பிரியம் இருக்கும். ஏன் தங்கம் மீது அவ்வளவு ஈர்ப்பு கொள்கிறார்கள் என தெரியவில்லை.

தலைவிரிக் கோலம்!

தலைவிரிக் கோலம்!

சில சமயங்களில் ஃபேஷன் என்று அவர்கள் செய்துக் கொண்டு வரும் சிகை அலங்காரம் தலைவிரிக் கோலமாக இருக்கும். இது நிஜமாகவே ஃபேஷனா, இல்லை தலைசீவ மறந்துவிட்டார்களா? என்று தான் தோணும்.

தனி வாழ்க்கை!

தனி வாழ்க்கை!

வெளி ஊர்களில், வேலை இடமாக இருந்தாலும் சரியாக எல்லாருடனும் ஒட்டி உறவாட மாட்டார்கள். அவர்கள் குழு மிகவும் சிறிதாக இருக்கும். அவர்களை பற்றி மட்டுமே பேசிக் கொண்டு தனி வாழ்க்கை வாழ்வார்கள்.

பேசுவார்களா?

பேசுவார்களா?

ஒரு பெண் மிகவும் ஃபேஷனாக இருந்தால், அவரிடம் பழக கொஞ்சம் கூச்சம், தயக்கம் இருக்கும். அவர்கள் நம்மிடம் எல்லாம் பேசுவார்களா? பழகுவார்களா? என்ற எண்ணம் இருக்கும். அதே போல, ஃபேஷன் பெண்களை பார்த்து அவர்களது பொருளாதார நிலையை அறிவது மிகவும் கடினம். அவரது தோற்றத்திற்கும், பொருளாதார நிலைக்கும் பெரிய வேறுபாடுகள் கூட இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Fashionista Versus Traditional Tamil Girls- What They Think About Each Other?

Fashionista Versus Traditional Tamil Girls- What They Think About Each Other?