பிரித்த காதலியை பழி வாங்க ஆண்கள் செய்யும் கிறுக்குத்தனமான செயல்கள்!

Written By:
Subscribe to Boldsky

ஒரு ஆணும் பெண்ணும் காதலிக்கும் போது இந்த உலகில் நான் உனக்கென என்ன வேண்டும் ஆனாலும் செய்வேன் என்பது போல நடந்து கொள்வார்கள். நாட்கள் செல்ல செல்ல அந்த காதலில் சில சின்ன சின்ன சண்டைகள் வந்து அவையே பெரிதாக வெடித்துவிடும். பின் காதல் பிரிவும் ஏற்படும். இந்த காதல் பிரிவு இருவரின் முடிவாக இருந்தால், பெரிதாக பிரச்சனை இல்லை. ஆனால் ஒருவர் காதலை விட்டு வெளியேற மனமில்லாமல் இருந்தால், சில பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உண்டு.

அதுவும் சிலர் பழிவாங்கப்போவதாக நினைத்து சில கிறுக்குத்தனமான வேலைகளில் ஈடுபடுவார்கள். இப்படி எல்லாம் செய்தால் மட்டும் போனவர் திரும்பி வரப்போகிறாரா என்ன? நிச்சயமாக இல்லை. ஏதோ ஒரு அற்ப சந்தோஷத்திற்காக இப்படி செய்வது எல்லாம் நாகரிகமற்றவர்கள் செய்யும் வேலை என்றே சொல்ல வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. மணமகன் தேவை விளம்பரம்

1. மணமகன் தேவை விளம்பரம்

ஒருவர் தனது காதலி தன்னை பிரிந்து சென்று விட்டதால், அவரது போன் நம்பருடன் சேர்த்து திருமணம் செய்து கொள்ள மணமகன் தேவை என்று ஊர் முழுவதும் தனது சொந்த செலவில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்.

2. கழிப்பறையில் போன் நம்பர்

2. கழிப்பறையில் போன் நம்பர்

கழிப்பறையில் உங்களது போன் நம்பர் எழுதப்பட்டிருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும். இது போன்று தான் ஒருவர் தனது காதலியின் நம்பரை கழிப்பறையில், காதலன் தேவை என்ற வாசகத்துடன் எழுதியுள்ளார். அப்பறம் என்ன அவருக்கு நிறைய போன் கால்கள் சென்றுள்ளன.

3. போலி பேஸ் புக் ஐடி

3. போலி பேஸ் புக் ஐடி

அவருடைய புகைப்படத்துடன் தவறான நோக்கதிற்காக, போலி பேஸ் புக் ஐடி ஆரம்பித்து, அவரது பெயரை சமூகவலை தளங்களில் கெடுப்பது போன்ற முட்டாள்த்தனமான வேலைகளிலும் சிலர் ஈடுபடுகின்றனர்.

4. அலார்ட் செய்வது

4. அலார்ட் செய்வது

மரங்கள், சுவர்கள் என கண்ட இடங்களில் இவர் என் காதலி அல்லது காதலன். நீங்கள் தயவு செய்து இவரை காதலிக்க வேண்டாம். என பிறருக்கு எச்சரிப்பதை போல, தன் காதலன் அல்லது காதலியின் மானத்தை வாங்குவது..!

5. நெருங்கியவரை காதலிப்பது

5. நெருங்கியவரை காதலிப்பது

அடுத்த மோசமான பழிவாங்கல் என்னவென்றால், விட்டு சென்ற காதலி / காதலினின் நெருங்கிய நண்பரையே காதலிக்க ஆரம்பிப்பது. இது யாருக்குமே மிக தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் ஒன்று தான்.

6. பரிசுகள்!

6. பரிசுகள்!

அவர் காதலிக்கும் காலத்தில் கொடுத்த பரிசுகள் அனைத்தையும் எரிப்பது, தூக்கி எரிவது கூட சரி.. ஆனால் அவர் காதலிக்கும் காலத்தில் வாங்கி கொடுத்த பரிசுகளை விற்று அந்த பணத்தில் குடிப்பது எவ்வளவு ஒரு அதிமேதாவித்தனம்...

7. ரிலாக்ஸ்..!

7. ரிலாக்ஸ்..!

உங்களது காதல் உண்மையிலேயே பிரிந்து விட்டது இனி சேர வாய்ப்பே இல்லை என்ற நிலை வந்தால், அவரை பழி வாங்க நினைக்காதீர்கள். அது உங்களது நிலையை தான் தாழ்த்தும். அவரை மறந்துவிட்டு உங்களது வாழ்க்கையை வாழ பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

angry lovers seek revenge after a break up

angry lovers seek revenge after a break up
Story first published: Thursday, September 21, 2017, 16:47 [IST]