For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு தலைக் காதலால் வெறிப்பிடித்த இளைஞன் செய்த கொடூரம்! My story#69

காதல் வாழ்க்கையை புரட்டிப் போடும் என்று கேள்விப்பட்டிருப்போம் அப்படியான ஒரு காதல் கதை இந்த காதல் யாருடைய வாழ்க்கையை எப்படி புரட்டிப் போட்டது என்று பாருங்கள்

|

காதல் என்பதை எவ்வளவு தூரம் ரொமாண்டிசைஸ் செய்து பார்க்கிறோமோ அதேயளவு ஏன் அதை விட அதிகமாக கோரமுகத்தை தன்னுள்ளே கொண்டுள்ளது என்பதை சில நாட்களாக நாம் உணர்ந்து வருகிறோம் என்பது தான் உண்மை. அது ஒரு தனி ஃபீல் என்று ஆரம்பித்து வைக்கும் முதல் படி அடுத்தடுத்து நீ இல்லையென்றால் நானில்லை என்ற ஸ்டேஜ் எல்லாம் கடந்து தற்போது எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது என்ற ரீதியில் கொலை செய்யவும் துணிகிறார்கள்.

இது காதலின் இன்னொரு முகம் என்று நீங்கள் நினைத்து பார்க்க கூட முடியாத அளவுக்கு சம்பவங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் கூடிக் கொண்டேயிருக்கிறது.

A guy doing annoying thing after his break up

இதனை எல்லாம் திருப்பி போடும் அளவுக்கு ஒரு தலைக்காதலால் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு ஆணின் குரல் இது!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பைத்தியம் :

பைத்தியம் :

சென்னையின் பிரபலமான கல்லூரியில் பி.காம் படித்துக் கொண்டிருந்தேன். கல்லூரி இறுதியாண்டில் சக தோழி ஒருத்தி மீது காதல். அதை காதல் என்று வகைப்படுத்த எல்லாம் என்னால் முடியவில்லை அவளைப் பார்த்தால் அவ்வளவு பிடிக்கும். அவள் எனக்குத் தான். அவள் எனக்கானவாள் என்று தினம் தினம் சொல்லிக் கொள்வேன்.

கல்லூரியில் அவளிடம் யாராவது சென்று பேசினாளே மிரட்டிடும் அளவுக்கு அவளின் பைத்தியமாய் இருந்தேன்.

காதலைச் சொல் :

காதலைச் சொல் :

நான் இவ்வளவு தீவிரமாய் இருப்பதைப் பார்த்து நண்பர்கள் சிலர் உன் காதலை முதலில் அவளிடம் சொன்னாயா? என்ற கேள்வியை கேட்டு வைத்தார்கள். நூறு பேர் வந்தால் கூட அசால்டாக எதிர்த்து நிற்க கூடிய தைரியம் எனக்கிருக்கிறது தான் ஆனால் என் காதலை ஒரு பெண்ணிடம் சென்று சொல்லத்தான் அவ்வளவு தடுமாற்றங்கள்.

இதுவரை அவளிடம் பேசியது இல்லை. பார்க்கும் போது சிரித்துக் கொள்வோம் அவ்வளவு தான். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் இப்படியே தான் ஓடியிருக்கிறது. கடைசி செமஸ்டர் ப்ராஜெக்ட் என்று கல்லூரிக்கே வராத காலத்தில் அவளை எங்கே சந்தித்து எங்கே என் காதலைச் சொல்வது.

நண்பர்கள் :

நண்பர்கள் :

எனக்கிருந்த ஒரே தயக்கம் அவள் என் காதலை ஏற்காவிட்டாள். என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டாள் என்பது தான். அவ்வளவு அன்பு உன் மீது இருக்கிறது என்பதை எப்படிச் சொல்லி புரியவைப்பது என்றெல்லாம் எனக்குத் தெரியாது. கவிதையை எழுதி, க்ரீடிங்கார்டும் ஒற்றை ரோசாவும் கொடுக்கவும் விருப்பமில்லை.

நான் காதலிக்கிறேன் என்பதை எப்படிச் சொல்ல.... நண்பர்களிடம் கேட்டால் இது ஏதோ நான் பொழுது போக்காக செய்வதாக் நினைத்து இவ்விஷயத்தில் யாருமே தலையிட முன் வரவில்லை.

தனியாக அழைத்தேன் :

தனியாக அழைத்தேன் :

அன்றைக்கு கல்லூரியில் ப்ராஜெக்ட் சப்மிட் செய்வதற்காக எல்லாரும் வந்திருந்தோம். அவளும் தான். இன்றைக்கு தான் சரியான தருணம் என்று நினைத்து எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொண்டேன். தயக்கத்தையும் நடுக்கத்தையும் மறைக்க ஒரு சிக்லெட்டை வாயில் போட்டுக் கொண்டேன்.

நாங்கள் பெண்கள் தனி ஆண்கள் தனி என் உட்கார்ந்திருந்தோம்.

தோழிகள் இருவருடன் உட்கார்ந்து எதையோ விவாதித்துக் கொண்டிருந்தாள். ஒரு நிமிஷம் இங்க வாயேன் ஒரு டவுட் என்று சொல்லி அழைத்தேன் அவளை என்னையும் தோழிகளையும் ஒரு முறை பார்த்து விழித்தாள்.

என்னுடன் வா :

என்னுடன் வா :

கல்லூரி முழுமைக்கும் ரவுடி, பொறுக்கி என்று பெயர் பெற்றிருந்த நான் அழைத்ததும் என் தங்கையாக இருந்தாலுமே ஒரு நிமிடம் யோசித்திருப்பாள் தான்.

என்ன டவுட் சொல்லுங்க இங்கயே க்ளியர் பண்றேன் என்றாள்.

அடிப்பாதகத்தி..... என்று நினைத்துக் கொண்டு. இல்ல புக் அங்க இருக்கு நான் பண்ணியிருக்குற ப்ராஜெட் ப்ரஷண்டேஷன் பத்தி. ஃப்ரண்ட் பேஜ் மட்டும் கொஞ்சம் ஃபில் பண்ணனும் என்று தலையை சொரிந்து கொண்டு நின்றேன்.

வாழ்க்கை முழுமைக்கும்:

வாழ்க்கை முழுமைக்கும்:

ஹோ ஃப்ரண்ட் பேஜா என்று சொல்லி எழுந்து கொண்டாள். சற்றுத் தள்ளி என்னுடன் நடக்க ஆரம்பித்தாள்.

பெண்கள் உட்கார்ந்திருக்கும் பகுதியிலிருந்து நாங்கள் உட்கார்ந்திருக்கும் பகுதிக்கு சென்று சேர நடுப்பகுதிக்கு வந்திருந்தோம் இப்படியே என்னோடு வாழ்க்கை முழுமைக்கும் வந்துவிட மாட்டாளா என்று தோன்றியது.

ஒட்டுமொத்த நம்பிக்கையையும் திரட்டி ஐ லவ் யூ.... என்னைய கல்யாணம் பண்ணிக்கிறியா என்று கேட்டுவிட்டேன்.

கொட்டினேன்:

கொட்டினேன்:

ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றாள். என் கண்களைப் பார்க்க அவள் பயந்து விட்டாள் எதிராளியின் கண்களில் பயத்தைப் பார்த்தால் நமக்கு தைரியம் பிறந்து விடும் தானே இதோ எனக்கு தைரியம் பிறந்து விட்டது. ஏய்... நிஜமா டீ ரொம்ப நாளா உன் மேல எனக்கு லவ் இருக்கு ஆனா சொல்லத்தான் பயம் என்று மனதில் நினைத்துக் கொண்டிருந்தவற்றை எல்லாம் கொட்டித் தீர்த்தேன்.

பதிலேதும் சொல்லவில்லை... திரும்பி சென்று விட்டாள் தன் பையை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள். கல்லூரி வாசல் வரைக்கும் பின்னாலேயே சென்றேன்.ம்ம்ம்ஹூம்.... கொஞ்சம் கூட மதிக்கவில்லை

சீனியர் :

சீனியர் :

எவ்வளவு திமிர் அவளுக்கு எதாவது சொல்லிட்டு போனா என்னவாம்? என்ற அவள் மீதான முதல் கோபம். மீண்டும் கல்லூரியில் அவளைப் பார்க்கும் போது என்னைப் பார்த்தாலே வேறு இடத்திற்கு நழுவிச் சென்று விடுவாள்.

ஒரு நாள் கல்லூரி கேண்டீனில் தனியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தவளை மடக்கினான். அவளால் இம்முறை நழுவ முடியவில்லை தலையை குனிந்து கொண்டு சாப்பிடுக்கொண்டேயிருந்தாள்.

நான் லவ் பண்றேன்னு சொல்றேன்.. நீ ஆமா இல்லன்னு எதையாவது சொல்லு சும்மா இப்டி ஓடிட்டேயிருந்தா என்ன அர்த்தம்? என்னைய பாத்தா உனக்கு எப்டி தெரியுது என்று கொஞ்சம் எரிச்சலுடன் சொல்லிவிட்டேன். கொஞ்சம் தயக்கத்துடன் எதிரில் பார்த்தால் என்னுடைய சீனியர் எங்களுக்கு இரண்டு வருடங்கள் முந்தைய பேட்ச் ஒரு அண்ணன் நின்று கொண்டிருந்தார்.

கேங் வார் அண்ணன் :

கேங் வார் அண்ணன் :

டேய் என்னடா தம்பி... க்ளாஸ்ல எல்லாரும் எப்படியிருக்கீங்க... செம்ம மாஸ் காட்றீயாமே என்று என் தோலில் கை போட்டு உட்கார்ந்து கொண்டார். எனக்கு வார்த்தையே வரவில்லை இல்லண்ணா... அப்டி எல்லாம் எதுவும் இல்லண்ணா என்று நாய்க்குட்டி போல பம்மிக் கொண்டிருந்தேன்.

அண்ணனின் புகழ் கல்லூரி முழுமைக்கும் போஸ்டர் அடித்து ஒட்டும் அளவுக்கு ஏகப்பிரபலம். படிப்பு மட்டும் அவருக்கு எட்டாக்கனி மற்றபடி ஸ்போர்டஸ் அண்ட் கல்சுரல்ஸ் என்றால் பிச்சு உதறிடுவார். அதை விட அடிதடி கேங் வார் என்றால் முதல் ஆளாக நிற்பது அண்ணன் தான்.

அண்ணி :

அண்ணி :

சில விசாரிப்புகள் மற்றும் பேச்சு வார்த்தைக்குப் பிறகு சாப்பிட்டியா காபி சொல்லியிருக்கேன் வாங்கிக்கோ காசு கொடுத்துட்டேன் என்றார் அவளிடம். எதுக்கு காபி சொன்ன இதுவே எனக்கு ஃபுல்லாகிடுச்சு என்றாள்.

சரி கொண்டா நானே குடிக்கிறேன் என்று சொல்ல அவள் எழுந்து சென்று விட்டாள்.

எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை என்னுடைய சீனியர் அவளுக்கும் பரிச்சியமானவரா என்று? அண்ணா அது எங்க கிளாஸ் பொண்ணு உங்களுக்கு எப்டி என்று இழுக்க...

இன்னக்கி அது உங்க கிளாஸ் பொண்ணுடா நாளைக்கு அது உங்க அண்ணி ... என்று சொல்லி சிரித்தார்.

குடையும் கேள்வி :

குடையும் கேள்வி :

எனக்குத்தான் சிரிப்பு வரவில்லை. அப்படியே அமைதியானேன். இருவரும் பேசி விடைப்பெற்றார்கள். அவனை விட என்ன விதத்தில் நான் குறைந்து விட்டேன் என்னை எதற்கு வேண்டாம் என்றாள் என்ற கேள்வி என் மண்டையில் குடைந்து கொண்டேயிருந்தது.

நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருந்த அந்த குடைச்சல் அவளை யாரிடமும் எதற்காகவும் விட்டுத்தரக்கூடாது என்ற ரீதியில் திசை மாறி வளரத் துவங்கியது.

ஒற்றைக் காரணம் :

ஒற்றைக் காரணம் :

நீ எனக்கு வேணும் என்பதை மட்டும் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டேயிருந்தேன். எப்டியாவது அவள் எனக்கு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அவளை நான் காதலிக்கிறேன் என்ற ஒற்றைக்காரணம் எனக்கு போதுமானதாக இருந்தது.

மீண்டும் அவளிடம்...

மிரட்டல் :

மிரட்டல் :

நான் ஏற்கனவே ஒருத்தர லவ் பண்றேன். இந்த நேரத்துல உன்னைய எப்டி என்று ஒரு பதில் தான் அவளிடமிருந்து வந்தது. இவ்விஷயம் என் சீனியருக்கும் கசிந்து, அவர் என்னிடம் கொஞ்சம் மிரட்டும் தொனியில்.... டேய் தம்பி ,அங்க இங்கனு சுத்தி நம்ம வீட்லயே கைய வைக்கிற பாத்தியா... ஒழுங்கா இரு இல்லன்னா நடக்குறதே வேற இனிமே அவகிட்ட வம்பு பண்றதா கேள்விப்பட்டேன் அவ்ளோ தான் என்று மிரட்டிவிட்டுச் சென்றார்.

ஈகோ :

ஈகோ :

அவ்வளவுதான் ஈகோவை உசுப்பிவிட்டது போலாகிவிட்டடது. என்னை எப்படி அவர் மிரட்டலாம். நான் காதலிக்கிறேன் என்பதை ஏன் யாரும் புரிந்து கொள்ளவே மாட்டேன் என்கிறார்கள் என்ற கேள்வி என்னுள் எழ ஆரம்பித்தது.

எனக்கு என்ன தகுதியில்லை ஏன் என்னை அவள் நிராகரித்தாள் இப்படியாக எல்லாம் சேர்ந்து என் மண்டையில் புகைந்து கொண்டேயிருந்தது.

போன் செய்தேன் அவளுக்கு.... மீண்டும் நான் என் காதலைச் சொல்லி கெஞ்ச அவள் சில நேரம் எதையோச் சொன்னால் எதுவுமே என் மண்டையில் ஏறவில்லை நான் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தேன் போனை கட் செய்தாள். பல முறையும் முயற்சித்தும் அவள் எடுக்கவில்லை.

அவளின் வீடு :

அவளின் வீடு :

எவ்ளோ திமிறு அவளுக்கு நான் யாருன்றத அவளுக்கு காட்டணும் என்ற எண்ணம் உருவாகியது.

பைக்கை எடுத்துக் கொண்டு நேராக அவள் வீட்டிற்குச் சென்றேன். இப்போது அவள் மீதான அன்பு எனக்கு வெறியாக மாறியிருந்தது. பார்த்தால் வெட்டி சாய்துவிட வேண்டுமளவுக்கு அவள் மீதான வெறியிருந்தது.

நடு வீட்டில் நின்று கொண்டு அவளை ஓங்கி அறைந்தேன். அவளின் அம்மா தங்கை என்னை பிடித்து இழுத்தார்கள்.... அவர்களுக்கும் அடி சுருண்டு ஒரு மூளையில் விழுந்தார்கள். அவள் தலைமுடியை பிடித்து அடித்து உதைத்தேன்.

ஆத்திரத்தின் உச்சியில் :

ஆத்திரத்தின் உச்சியில் :

என்னடீ நினைச்சுட்டு இருக்க... என்னைய பாத்தா உனக்கு எப்டி தெரியுது எவ்ளோ நாள் தான் ஒருத்தன் உங்க பின்னாடி வரணும் என்று வாயில் வந்த கெட்ட வார்த்தைகளை எல்லாம் கொட்டிக் கொண்டிருந்தேன். அவள் என் பிடியிலிருந்து நழுவ முயற்சித்துக் கொண்டேயிருந்தாள்.

அடித்துப் பிடித்து பால்கனிக்கு வந்திருந்தோம். ஆத்திரத்தில அவள் கழுத்தை நெரிக்க அவள் என்னிடமிருந்த தப்ப எதிர் சுவற்றில் காலை வைத்து எக்கினாள் கைகாளால் என்னைப் பிடித்து தள்ள நான் நிலை தடுமாறினேன் அவள் தன்னை தற்காத்துக் கொள்ள உள்ள அறைக்கு ஒட அவளைப் பிடிக்கிறேன் என்று நிலைதடுமாறினேன்.

அந்த விபத்து :

அந்த விபத்து :

கீழே விழாமல் பால்கனிச்சுவற்றை பிடிக்கிறேன் என்று பால் கனியை ஒட்டி சென்றுக்கொண்டிருந்த மின் சார கம்பியில் என் கைவிரல் பட்டு ஷாக் அடித்து தூக்கி வீசப்பட்டேன். கிட்டத்தட்ட மூன்றாவது மாடியிலிருந்து.

கண்விழித்துப் பார்த்து போது மருத்துவமனையில் கிடந்தேன். கரண்ட் ஷாக் அடித்து தூக்கி வீசப்பட்டதில் ஒரு கை முற்றிலுமாக சிதைந்து அகற்றியிருந்தார்கள். ஒரு கால் ப்ராக்சர் இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமானால் நடைபிணம் தான்.

அவள் :

அவள் :

இச்சம்பவம் நடந்து எட்டு வருடங்கள் ஆகிவிட்டது. நான்கு வருடங்கள் வரை தீவிர மன உளைச்சலில் இருந்தேன் மருத்துவ ஆலோசனையும் எனக்கு வழங்கப்பட்டு வந்தது. இன்றைக்கு மாற்றுத்திறனாளி பிரிவில் வங்கியொன்றில் வேலை. அவள் என்ன ஆனாள் என் சீனியரையே திருமணம் செய்து கொண்டாளா என்றெல்லாம் தெரியாது.

காதலும் வாழ்க்கையும் :

காதலும் வாழ்க்கையும் :

ஒரு காதல் வாழ்க்கையையே மாற்றும் என்றார்கள் ஆனால் அது இப்படி மாற்றும் என்று நான் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. விபத்தில் உருக்குலைந்து மருத்துவமனையில் கிடந்த போதும் எப்படியாவது அவளை பழிவாங்கிட வேண்டும் என்ற எண்ணம் இன்னும் பல மடங்கு அதிகரிக்கவே செய்தது.

அதை விட தீவிர மன அழுத்ததாலும் பாதிக்கப்பட்டிருந்தேன். சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனையும் மனநல சிகிச்சையும் கிடைக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் எங்கள் இருவரில் யாராவது ஒருவர் இறந்திருப்போம்.

அமில வீச்சு :

அமில வீச்சு :

முதன் முதலாக வெளிச்சத்திற்கு வந்து பரவலாக பேசப்பட்ட சம்பவம் இது. தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு தன் சொந்த ஊரான காரைக்காலிலிருந்து சென்னைக்குச் செல்ல பேருந்து நிலையத்தில் தந்தையுடன் சென்று கொண்டிருந்த வினோதினி என்ற பெண் மீது சுரேஷ் குமார் ஆசிட் வீசினார்.

2012 ஆம் ஆண்டு நடைப்பெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சில நாட்களில் வினோதினி உயிரிழந்து விட சில மாதங்களில் அவரது தாய் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தந்தை மட்டும் தனியாக வாழ்ந்து வந்தவர் சில வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

ஒரு தலைக்காதல் :

ஒரு தலைக்காதல் :

ஒருவரின் ஒருதலைக்காதல் ஒரு குடும்பத்தையே நிர்மூலமாக்கி விட்டது.

இது மட்டுமே இந்த அத்தியாயத்தில் நிற்கக்கூடிய கொடூர சம்பவம் என்று நினைத்து விடாதீர்கள். இதைப் போலவே என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டாள், என் காதலை ஏற்க மறுத்து விட்டாள், என்னை ஏமாற்றி விட்டாள், எனக்கு துரோகம் செய்து விட்டாள் என்று சொல்லி கொலை செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.

தொடர்ந்து அதிகரிக்கும் :

தொடர்ந்து அதிகரிக்கும் :

இப்படி கொலை செய்யப்படுகிற பெண்களின் எண்ணிக்கை இது தான் கடைசி என்று சொல்லி சொல்லியே பட்டியல் நீண்டு கொண்டிருப்பதை யாராலும் தடுக்க முடியவில்லை 2012 ஆம் ஆண்டு வினோதினி இதோ இன்றைக்கு 2017 க்குள் வித்யா, ஸ்வாதி,நவீனா,சோனாலி,பிரான்சினா, மோனிஷா, தான்யா,சோனியா,இந்துஜா என்று கூடிக் கொண்டே தானிருக்கிறது.

காரணம் :

காரணம் :

இவர்கள் எல்லாருமே கொலை செய்யப்பட்ட காரணம் ஒன்று தான். எனக்கு கிடைக்காத நீ வேறு யாருக்கும் கிடைத்து விடக்கூடாது என்பது தான். வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது, சர்ச்சில் பிரார்தனை செய்து கொண்டிருக்கும் போது, குடும்பத்துடன் நடுவீட்டில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது, அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருக்கும் போது என ஒரு பெண் இயல்பாக செய்யக்கூடிய விஷயங்களின் போது தான் இப்படியான கொடூரங்கள் நிகழ்ந்திருக்கிறது என்பதை யாரும் மறந்திட வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

A guy doing annoying thing after his break up

A guy doing annoying thing after his break up
Desktop Bottom Promotion