அன்றைய இரவை இன்று வரை மறக்க நினைக்கிறேன்... ஆனால், முடியவில்லை... My Story #110

Posted By:
Subscribe to Boldsky

சீக்கிரம் கிடைக்கும் எந்த ஒரு நல்ல விஷயமும், சீக்கிரமே நம்மைவிட்டு விலகிவிடும் என்பார்கள். ஆனால், நான் அவளை இழந்தது என் தவறால். அவளும், நானும் எப்படி அவ்வளவு சீக்கிரம் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இணைந்தோமோ... அதே வேகத்தில் ஒருவரையொருவர் விட்டு பிரிந்தோம்.

நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டதும், பேசி, பழகிய அந்த குறுகிய நேரம் சினிமாவில் வரும் காட்சிகள் போன்றதாக இருந்தது. நான் எதிர் பார்த்தது வெறும் நட்பு தான். ஆனால், எனது சில செயல்கள், நான் பேசிய வார்த்தைகள், அந்த நட்பை முற்றிலுமாக உடைத்தெறிந்துவிட்டது.

மீண்டும் ஒரு வாய்ப்பு நிச்சயம் கிடைக்காது. ஆனால், கிடைக்குமா என மனம் ஏங்கிக் கொண்டிருக்கிறது. அவளுடன் செலவிடும் நேரங்கள் யாவும் பொன்னனாவை. அதை அதிகம் உணர்ந்தவன் என்பதால் ஏனோ, அதை மீண்டுமொரு முறை அனுபவித்துவிட ஏக்கம் மேலோங்குகிறது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நான்!

நான்!

எனது கதாப்பாத்திரம் கொஞ்சம் சினிமாட்டிக்காக தான் இருக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் விஜய் ஒரு படத்தில் பேசிய வசனம் போல. எனக்க இங்க (மூளை) என்ன தோணுதோ அதை செய்வேன், இங்க (இதயம்) என்ன சொல்லுதோ, அதை சொல்லுவேன்.

மனதில் பட்டதை உடனே கூறிவிடும் மனோபாவம் கொண்டவன் தான். எதற்காகவும், யாருக்காகவும் உண்மையை மறைத்துப் பேசக் கூடாது என நினைப்பவன். ஆனால், உண்மைகள் சில சமயம் தவறாக புரிந்துக் கொள்ளப்படும். அப்படி தான் நான் பேசிய வார்த்தைகளை அவள் புரிந்துக் கொண்டாளோ என்ற சந்தேகம் என்னுள் நீடித்திருக்கிறது.

முதல் சந்திப்பு..

முதல் சந்திப்பு..

எங்கள் முதல் சந்திப்பு எதிர்பாராத ஒன்று. அன்று நான் நண்பர் ஒருவரை சந்திக்க தனியாக மால் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அவர் வர நேரம் தாமதம் ஆனதால், லைப்ஸ்டைல்-க்குள் நுழைந்து எப்போதும் போல ஆடைகளை நோட்டம்விட்டுக் கொண்டிருந்தேன். பிறகு, சிறிது நேரம் கழித்து ஏதோ ஒரு லைவ் பாடல் நிகழ்ச்சி மாலில் துவங்கியது. நிறைய பெண்கள் அந்த கூட்டத்தில் இருந்த காரணத்தாலேயே அங்கே சென்றேன்.

அவள்!

அவள்!

மாலுக்கு வந்தவர்களே பாட தெரிந்தவர்கள் வந்து பாடலாம், ஆடலாம் என்பது போன்ற ஒரு நிகழ்ச்சி. ஏதோ ஒரு புதிய பொருளை அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன. அப்போது தான் அவளை முதன் முறையாக கண்டேன். அவள் யாரோ ஒரு நபருடன் மிகவும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். கண்டிப்பாக காதலராக இருக்கக் கூடாது நண்பராக இருக்க வேண்டும் என கருதினேன். ஆனால், அந்த நபர் நண்பரும் இல்லை.

பழகலாம் வாங்க!

பழகலாம் வாங்க!

அவளுக்கு மூன்றாம் நபர்களுடன் பழகுவதில் எந்த கூச்சமும் இல்லை. மிக சகஜமாக பழகுவாள் என்பதை அந்த முதல் சந்திப்பிலேயே உணர்ந்தேன். அந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக வேலை செய்துக் கொண்டிருந்தாள். வெகு சிலரே பாட வந்ததால், அவளே முன்னே சென்று ஆள் பிடித்துக் கொண்டிருந்தாள். கொஞ்சம் தொலைவில் இருந்து அவளை நோட்டம்விட்டுக் கொண்டே இருந்தேன்.

அருகே...

அருகே...

அவளை மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென மறைந்துப் போனாள். எங்கே சென்றால் என தெரியாவில்லை. அப்போது "நீங்க பாடுவீங்களா?" என ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால் அவள். என்னிடம் தான் பேசிக் கொண்டிருக்கிறாள். அதை என்னால் நம்பவே முடியவில்லை. "பாட தெரியாது. ஆனா ஆடுவேன்... நீங்க கூட ஆடுவீங்களா?" என கேட்டேன்.

ஓ.கே!

ஓ.கே!

முகத்தைத் திருப்பிக் கொண்டு போவாள் என எண்ணினேன். என்னைப் போலவே சட்டேனே, "ஓகே... வாங்க ஆடலாம்" என கையைப் பிடித்து இழுத்து சென்றாள்." அங்கே தொகுப்பாளாராக நின்றுக் கொண்டிருந்த நபர் உடனே எங்கள் பெயரை மைக்கில் கூற, ஒரு இந்தி பாடலுக்கு நாங்கள் இருவரும் ஆடினோம். நான் அவள் பார்த்த நொடியில் இருந்தே வெளிவரவில்லை. ஆனால், வாழ்நாள் முழுக்க நான் சேமித்து வைத்துக் கொள்ள ஒரு பெரிய நினைவுப் பெட்டகத்தை என்னிடம் கொடுத்து சென்றாள்.

நண்பர்!

நண்பர்!

நான் அவ்வளவு நேரம் காண காத்திருந்த நபர் அப்போது தான் மாலுக்குள் வந்திருக்கிறார். அவர் கண்ட காட்சி நான் அந்த பெண்ணுடன் நடனமாடிக் கொண்டிருந்தது. என்னை கண்டதும் அவர் கேட்ட முதல் கேள்வி "என்ன வர சொலிட்டு, நீ யாருக் கூட ஆடிட்டு இருக்கான்...?". "இல்ல ப்ரோ, நீங்க வர லேட் ஆச்சுல்ல... அதுக்குள்ள இந்த ப்ரோக்ராம் செட் ஆயிடுச்சு" என கெத்தாக கூறிக் கொண்டேன்.

பிராஜக்ட்!

பிராஜக்ட்!

அந்த நண்பர் எனக்கொரு பிராஜக்ட் தருவதற்காக வந்திருந்தார். இதுவொரு ப்ரைவேட் பிராஜக்ட், எப்படியும் முடித்துக் கொடுத்தால், ஐம்பதாயிடம் வரை கிடைக்கும். அலுவலக வேலைப் போக ஐ.டி-யில் பணிபுரிவோருக்கு கிடைக்கும் எக்ஸ்ட்ரா சம்பாத்தியம் இது. ஃபுட் கோட்டில் அமர்ந்து பிராஜக்ட் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே இடையே வந்து குறிக்கிட்டாள். "என்ன பண்றீங்க? மே ஐ ஜாயின் வித் யூ?" என்றாள்

பழகினோம்!

பழகினோம்!

"கண்டிப்பா வாங்க" என நண்பரிடம் கேட்காமலேயே ஒப்புதல் அளித்தேன். உணவு ஆர்டர் செய்து பேச துவங்கினோம். என் நண்பர் இடத்தை காலி செய்த பிறகும் கூட நாங்கள் இருவரும் நகரவில்லை. நாம் நடனம் ஆடிய வீடியோ வேண்டுமா? என்றால். ஆம் என்றேன். சரி உங்கள் வாட்ஸ்-அப் நம்பர் தாங்க, அனுப்புறேன் என்றாள்.

எப்படி இவக்கிட்ட நம்பர் கேக்குறது என தயங்கிய எனக்கு இது, கேட்காமல் கிடைத்த வரம். நாங்கள் நடனமாடிய வீடியோவை பகிர்ந்தாள்.

பேசினோம்!

பேசினோம்!

அன்று இரவில் இருந்தே அதிக நேரம் பேசினோம். டெக்ஸ்ட் மூலமாக பேசுவதை காட்டிலும், ஆடியோ மெசேஜ் அனுப்புவது எங்களுக்கு பிடித்தமான ஒன்று. முதல் பார்வையில் அவள் மீது எனக்கொரு ஈர்ப்பு இருந்தது. ஆனால், அவளுடன் பேசி பழகும் போதுதான், அவளது தூய்மையான இதயத்தை புரிந்துக் கொள்ள முடிந்தது.

காதல், கீதல், திருமணம் என்ற ஆசை எல்லாம் இல்லை. வாழ்நாள் முழுக்க இவள் என்னுடன் நட்பாக இருந்தால் மட்டுமே போதும் என்ற எண்ணம் உருவானது.

தாய் போன்றவள்!

தாய் போன்றவள்!

அவள் ஒரு தாயை போன்றவள். யாரேனும் தனக்கு ஏதாவது உதவி செய்தால் தான், நானும் உதவுவேன் என்ற மனப்பான்மை அவளிடம் அறவே கிடையாது. அவளாக முன்வந்து அனைவருக்கும் உதவுவாள். அவள் வாழ்வில் மட்டுமல்ல, பிறரது வாழ்விலும் அவள்ஒரு நாயகியாக திகழ்ந்தாள். அவளை பிடிக்கவில்லை என யாரேனும் கூறினால், கண்டிப்பாக அந்த நபர் மீது தான் குற்றம் இருக்கும்.

ஜிம்!

ஜிம்!

அவள் கொஞ்சம் பப்ளி. அது தான் அவளது அழகும் கூட. ஆனால், நிறைய கேலி, கிண்டல் என வந்த போது கூட கண்டுக்கொள்ளாதவள். ஏனோ, திடீரென ஜிம் ஜாயின் பண்ணலாம் வரியா என்றால்? அவள் அழைக்கும் எந்த இடத்திற்கும் நான் நோ சொல்லியதே இல்லை. ஜிம் தானே என ஓகே சென்றேன். இருவரும் ஒரே ஜிம்மில் சேர்ந்தோம். காலை எழுந்தவுடன் ஜிம்மிற்கு அவளே வந்த அவளது ஸ்கூட்டியில் என்னை அழைத்து செல்வாள்.

ஒரு நாள்...

ஒரு நாள்...

அன்று... நான் அவளை இழக்க காரணமாக இருந்த நாள்... காலை எழுந்ததும்...

நான்: வெளியே போகலாமா?

அவள்: எங்கே?

நான் : படம் அல்லது மால் எங்காவது?

அவள்: இல்ல நான் இன்னிக்கி படிக்கணும்...

நான்: சரி சரி ஓகே!

(அவள் ஒரு ஆன்லைன் கிளாஸ் பயின்றுக் கொண்டிருந்தால். அதை தான் கூறுகிறாள் என எண்ணினேன்.)

குடி!

குடி!

பிறகு எனது பிளானை நண்பர்களுடன் மாறினேன். ஹோம் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டே குடித்துக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு பாட்டில் காலியாகும் போதும். இன்னொரு பாட்டில் வாங்கி வந்துக் கொண்டே இருந்தனர். இப்படியாக இரவாகிவிட்டது.

படித்து முடித்திருப்பாள் என கருதி மீண்டும் அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்.

சாட்டிங்!

சாட்டிங்!

நான்: ஹாய்

அவள்: ஹாய்

நான்: என்ன பண்ணிட்டு இருக்க..?

அவள்: அப்பா, அம்மா கூட தான் வீட்டுல... சும்மா டிவி பார்த்திட்டு இருக்கேன்...

நான்: இன்னிக்கி என்ன பண்ண?

அவள்: அதான் சொன்னேன்ல, அப்பா, அம்மா கூட தான்.. நாள் முழுக்க சும்மா தான் இருந்தேன்..

நான்: அப்ப.. என் கூட வெளிய வந்திருக்கலாம்ல... என் கூட டைம் ஸ்பென்ட் பண்ணிருக்கலாம்ல?

அவள்: எதுக்கு வரணும்?

நான்: எதுக்கா? என்கூட இருக்க உனக்கு விருப்பம் இல்லையா?

அவள்: உன் கூட இருக்கவா?

நான்: உனக்கு நான் என்ன சொல்ல வரேன்னு புரியல.. லீவ் இட்!

அவள்: எனக்கு நல்லாவே புரியுது... நான் ஒன்னும் சின்ன பாப்பா இல்ல... ஆனா, இத உன்கிட்ட இருந்து நான் எதிர்பார்க்கல...

நான்: நான் எந்த Meaningலயும் சொல்லல. உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு தோனுச்சு அதான் சொன்னேன்.

அவள்: நாம எப்படியும் நாளைக்கு ஜிம்ல மீட் பண்ணதான போறோம். அப்பறம் என்ன? உனக்கு ஏதும் புரியலையா?

நான்: அது ஏன் ஒவ்வொரு தடவையும், நீ கூப்பிடும் போது நான் வரேன்... ஆனா, நான் கூப்பிடும் போது நீ வரது இல்ல... நான் மட்டும் தான் புரிஞ்சக்கனுமா? நீ புரிஞ்சுக்க மாட்டியா?

அவள்: எதை புரிஞ்சுக்கணும்?

நான்: வேண்டாம்! எதையும் நீ புரிஞ்சுக்க வேண்டாம்...

அவள்: நாம் ரெண்டு பேரும் நல்ல ஃபிரெண்ட்ஸ். அவ்வளவு தான். நீ இத புரிஞ்சுக்கிட்டா சரி!

நான்: அப்போ என்ன பார்க்கவோ, டைம் ஸ்பென்ட் பண்ணவோ வேண்டாம்ன்னு நினைக்கிறியா? நான் உனக்கு வெறும் டைம்பாஸ் அவ்வளோ தான? பரவாயில்லன்னு!

அவள்: என்ன பரவாயில்ல! போதும்! இதுக்கு மேல உன்கூட பேச எதுவுமே இல்ல!

ஏண்டா இப்படி பண்ண?

ஏண்டா இப்படி பண்ண?

என் வாழ்நாளில் என்னால் மறக்க முடியாத சாட்டிங். வாழ்நாள் முழுக்க இருக்க வேண்டிய நட்புறவை நானே சிதைத்துக் கொண்ட நேரம் அது. அந்த நேரத்தில் நான் போதையில் இருந்தேன். இல்லையேல் இப்படி பேசியிருக்க மாட்டேன்.

காலை எழுந்து இந்த சாட் ஹிஸ்டரி படித்து எனக்கு என்னை பிடிக்கவில்லை.

மறுப்பு!

மறுப்பு!

அதன் பிறகு அவள் என்னை ஜிம் அழைத்து செல்ல வரவில்லை. எங்களுக்குள் எந்த விதமான பேச்சும் இல்லை. ஆடியோ மெசேஜ் இல்லவே இல்லை. ஓரிரு ரிப்ளை வந்தது. அதுவும் அயம் பிஸி என்பது மட்டும் தான்.

என்மேல், எனக்கே வெறுப்பு அதிகரிக்க துவங்கியது. அவள் மீதும் கூட. அவளுக்கு என்ன அவ்வளவு திமிரு? ஏன் என் கூட பேசுனா என்ன என்று தோன்றியது.

டார்ச்சர்!

டார்ச்சர்!

அவள் ரிப்ளை செய்யும் வரை மெசேஜ் செய்துக் கொண்டே இருந்தேன். ஆனால், ரிப்ளை வரவே இல்லை. மெசேஜ் என்பதால் தானே ஒதுக்குகிறாள் என கால் செய்ய துவங்கினேன். விடாமல், அவள் அழைப்பை ஏற்கும் வரை அழைத்துக் கொண்டே இருந்தேன்.

டார்ச்சர் தாங்காமல், அவளே மீண்டும் அழைத்தாள்.

அவள்: உனக்கு இப்போ என்ன வேண்டும்?

நான்: நீ தான்...

அவள்: என்ன?

நான்: உன் கூட பேசனும்..

அவள்: என்ன பேசணும்?

நான்: ஜஸ்ட் சிம்ப்ளி.. உன்கூட நான் டைம் ஸ்பென்ட் பண்ணனும்.

அவள்: எதுக்கு?

நான்: எப்பவும் போல தான்... நீ என்கூட எப்பவும் ஃபிரெண்டா இருக்கனும்...

அவள்: பார்க்கலாம் (முடிஞ்சா)

நான்: எனக்கொரு வாய்ப்பு கொடு? நான் அன்னிக்கி பேசுனது வேற மீனிங்ல..

அவள்: அந்த மீனிங் எனக்கு புரிஞ்சது... இனிமேல் நான் உன்கூட பேச எதுவுமே இல்ல...

நான்: ப்ளீஸ்... கிவ் மி எ சான்ஸ்...

அவள்: -ப்ளீஸ் என்ன கொஞ்சம் தனியா நிம்மதியா விடு! தொல்லை பண்ணாத!

நொறுங்கியது இதயம்!

நொறுங்கியது இதயம்!

அவள் கூறிய அந்த கடைசி வார்த்தை என் இதயத்தை நொறுக்கியது. நானா அவளது நிம்மதியை கெடுக்கிறேன்? என்ற கேள்வி எழுந்தது. உண்மை தான். கடைசி ஓரிரு நாட்கள் நான் தான் அவளது நிம்மதியை கெடுத்தேன். ஆனால், அதற்கு முன் நாங்கள், எங்கள் நட்பு என எங்கள் இருவரின் நிம்மதியே நாங்கள் இருவரும், எங்கள் நட்பும் தான். இதை ஏன் அவள் மறந்தாள்.

காத்திருக்கிறேன்!

காத்திருக்கிறேன்!

நான் செய்தது சிறு தவறு. அதன் பிறகு நான் செய்தது கொஞ்சம் பெரிய தவறு. ஆயினும்... எங்கள் இருவருக்குள் நிரந்தர பிரிவை ஏற்படுத்தும் அளவிற்கு நான் தவறு செய்து விட்டேனா என்ன? என்ற வருத்தம் இருக்கிறது.

இன்று வரை அவளது செய்தி மற்றும் அழைப்புக்காக காத்திருக்கிறேன். சில மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால், நிச்சயம் அவளது நினைவுகள் என்னை விட்டு கடந்து செல்ல முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

A Good Friendship Ended in a Drunk Conversation!

A Good Friendship Ended in a Drunk Conversation!