20 வயதில் இக்காலத்து பெண்கள் செய்து பார்க்க விரும்பும் விஷயங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய உலகில் எட்டிப்பிடிக்கும் தூரம் என்பது மிகவும் குறைவு தான். நமது முயற்சியும், மன தைரியம் தான் வெகு தொலைவிற்கு சென்றுவிட்டன. ஆண், பெண் என்ற வேற்பாடு அற்ற சமூகம் பிறந்த வளர்ந்து வருகிறது. இவற்றுக்கு ஆண் தான் ஆசைப்பட வேண்டும், இவற்றுக்கு பெண் தான் ஆசைப்படும் என்ற பாகுபாடு இன்றில்லை.

திருமணத்திற்கு முன்பே உடலுறவில் ஈடுபட இன்றைய தலைமுறையினர் அதிகம் விரும்புவது ஏன்?

படித்து, முடித்த கையோடு சென்னை அல்லது பெங்களூர் என ஏதேனும் ஒரு மெட்ரோ நகரில் வேலை. பிறகென்ன முடிந்த வரை திருமணம் வரை வாழ்க்கையை ஜமாய்க்க வேண்டும் என்பது தான் இளைஞர்களது ஆசை மற்றும் கனவாக இருக்கிறது. இதில், பெண்கள் என்ன அதிகமாக விரும்புகிறார்கள் என இனிக் காணலாம்...

கல்யாணத்துக்கு அப்பறம் பொண்ணுங்க அதிகமா செய்யிற தவறுகள்!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெளியூர் வேலை

வெளியூர் வேலை

பெண்களுக்கு வெளியூர் செல்வது, வெளியூரில் வேலை என்பது சிலருக்கு மட்டுமே வரமாக அமைகிறது. பலருக்கு அது பயம் கலந்த விஷயமாக தான் இருந்து வருகிறது. கல்லூரி முடித்து வெளியூர் வேலைக்கு செல்வது என்பது பெண்களுக்கு இப்போது அதிகரித்து வரும் ஆசையாக இருக்கிறது.

தனியாக வாழுதல்

தனியாக வாழுதல்

புதியதாய் சிறகு முளைத்த பறவையை போல வேலை கிடைத்தவுடன் வானில் பறக்க விரும்பும் இவர்கள், தனிமையையும் விரும்ப துவங்குவது இந்த 20 வயதில் தான்.

தன் தேவைகளை பூர்த்தி செய்வது

தன் தேவைகளை பூர்த்தி செய்வது

உண்மையில் ஆண்களுக்கு இருக்கும் அளவிற்கு குடும்ப பொறுப்புகள், வீட்டிற்கு பணம் அனுப்ப வேண்டும் என்ற நிலைமை பெரும்பாலான பெண்களுக்கு இல்லை. ஆகவே, சுயமாக சம்பாதிக்கும் பணத்தில் தன் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ள விரும்புவது.

சுயமாக முன்னேறுதல்

சுயமாக முன்னேறுதல்

அப்பா, அண்ணன் போன்றோரின் உதவி இன்றி தானாக முன்னேறி சமூதாயத்தில் காலூன்ற வேண்டும் என்ற வலிமையான கனவு இக்காலத்து பெண்களிடம் அதிகரித்து வருகிறது.

லிவ்-இன் உறவு

லிவ்-இன் உறவு

சமூகத்தில் லிவ்-இன் உறவுகளில் இருப்பவர்கள் 10% கூட இல்லை. ஆனால், இதன் பிம்பம் என்னவோ வெளியூருக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் பெரும்பாலும் லிவ்-இன் உறவில் இருப்பது போல பரவி வருகிறது. மேற்கத்திய நாடுகளின் அளவுக்கு நம் நாட்டு பெண்கள் அவ்வளவு மோசமாகிடவில்லை என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

காதல்

காதல்

முன்பெல்லாம் நண்பர் கூட்டத்தில் யாரேனும் ஓரிருவர் காதலிப்பார்கள். இன்று, ஓரிருவரை தவிர மற்றவர்கள் அனைவரும் காதலில் முத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். காதல் என்பது ஓர் 20 வயதில் ஓர் அத்தியாவசியமாகி விட்டது. ஆண், பெண் என்ற வித்தியாசம் இன்றி இது பெரும் கனவாக மலர்ந்து வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things New Generation Girls Dream To Do In Their 20s

Things New Generation Girls Dream To Do In Their 20s, read here in tamil.
Story first published: Wednesday, February 24, 2016, 16:22 [IST]
Subscribe Newsletter