இந்த வருட காதலர் தினத்தன்று நீங்க சிங்களா? அப்ப சந்தோசப்படுங்க பாஸ்!!!

By: Viswa
Subscribe to Boldsky

இந்த வருட காதலர் தினமும் நாம ஒண்டிக்கட்டையா இருக்கமேன்னு வருத்தப் படறீங்களா? அட போங்க பாஸ், நீங்க தான் சந்தோச பட வேண்டிய முதல் ஆள்! நீங்க வருத்தப்படலாம்,மேல் வீட்டு பையனுக்கு ஆள் இருக்கு, கீழ் வீட்டு பையனுக்கு ஆள் இருக்கு. ஏன்? எதிர்த்த வீட்டு பையனுக்கு கூட ஆள் இருக்கு. ஆனா, நமக்கு மட்டும் ஆள் இல்லையேன்னு. ஆள் இருக்கு சரி, நிம்மதியா இருக்காங்களான்னு உங்களுக்கு தெரியுமா? அத தெரிஞ்சுக்க நீங்க இந்த கட்டுரைய படிச்சே ஆகணும்!

வருடத்தில் வந்து போகும் 365 நாட்களில், இதயம் அதிகமாக நொறுங்கும் நாள் என்னவோ பிப்ரவரி 14 ஆகத்தான் இருக்கும். சிலருக்கு கட்டியணைத்து நொறுக்கப் படும். பலருக்கு கட்டியணைத்துக் கொண்டுத் திரிபவர்களைக் கண்டு தானாகவே நொறுங்கிவிடும். இதில் நாம் இரண்டாவது வகை. மற்ற 364 நாட்களும் தூக்கம் வேண்டும் எனில், உங்களது துக்கத்தை துடைத்து தூக்கி எறியுங்கள். பொருளாதாரம், மன நிம்மதி, மகிழ்ச்சி, நண்பர்கள் என அனைத்தும் அதிகம் பெற்று நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை அமைய வரம் பெற்றவர் நீங்கள் தான். நீங்கள் பெற்ற இந்த வரத்தின் மூலம் உங்களுக்கு நிகழப் போகும் நன்மைகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படியுங்கள்...

Be Happy To Be A Single On Valentine Day

நோ! டென்ஷன், நோ! BP

நேரத்திற்கு காலை, மதியம், மாலை, இரவு என நேரம் தவறாது மொபைலில் அழைக்க வேண்டும். பேச எந்த விஷயம் இல்லையெனிலும் மணிக்காக பேச வேண்டும். உங்களது காதலி காலை எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை என்ன செய்கின்றார் என நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் அழைக்கும் போது நம் மொபைல் அணைக்கபட்டிருந்தால் சண்டை வரும். அதே, நாம் அழைக்கும் போது அவர்களது மொபைல் அணைக்கபட்டிருந்தால் குழப்பம் தான் வரும். இது போன்ற எந்த கவலையும் இன்றி சந்தோசமாக இருக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

பொய், புரட்டு!

காதல் எனும் கால்வாயில் நீங்கள் விழுந்துவிட்டால், உங்களது வாய் மட்டும் அல்ல கண்ணு, மூக்கு, காது என அனைத்தும் பொய் சொல்ல வேண்டிய கட்டாயம் வரும். உங்களுக்கு பிடித்த விஷயம் நீங்கள் செய்து வந்திருந்தாலும். அது உங்களது காதலிக்கு பிடிக்காத விஷயமாக இருந்தால் நீங்கள் பொய் சொல்லித்தான் ஆக வேண்டும். இது எல்லாம் உங்களுக்கு தேவையா? வாழ்க்கையை சந்தோசமாக அனுபவியுங்கள்!!!

Be Happy To Be A Single On Valentine Day

காத்திருப்பு

காதலில் காத்திருப்பது சுகம் என்று பல விஷமிகள் உங்களிடம் பொய் கூறுவார்கள். ஆனால் உண்மை என்னவெனில், "யாம் பெற்ற இன்பம் பெறட்டும் இவ்வையகமும்" என அவர்கள் எண்ணுவதே ஆகும். காதலிக்காக காத்திருப்பவனுக்கு மட்டுமே தெரியும் உண்மையான கால் வலி என்றால் என்னவென்று. அவர்கள் காத்திருந்தால் கடுப்பாவார்கள், நாம் காத்திருந்தாள் காதலுக்காக இது கூட செய்யமாட்டாயா என ஈஸியாக சொல்லிவிடுவார்கள்.

முகப்புத்தகம் சிறைப்படும்

முகப்புத்தகத்தில் நீங்கள் இடும் ஒவ்வொரு ஸ்டேட்டஸ்'க்கும் பதில் கூற வேண்டியக் கட்டாயம் நிச்சயம் ஏற்படும். பெண் தோழிகளின் நட்பு அறுபடும். ஒரே ஒரு "In Relationship" ஸ்டேட்டஸிற்கு ஆசைப்பட்டு முகநூல் வாழ்க்கையையும், இன்பத்தையும் தொலைத்துவிடாதீர்கள்.

Be Happy To Be A Single On Valentine Day

வேலையின் மீது கவனம்

என்னதான் காதல் என்றாலும், அது உங்களுக்கு சாப்பாடுப் போடாது. நீங்கள் வேலைக்கு போனால் தான் உங்களுக்கு சாப்பாடு. அதற்கு நீங்கள் சரியாக வேலை பார்க்க வேண்டும். ஆனால் மாறாக, நீங்கள் சரியாக வேலை செய்யும் நேரம் பார்த்து தான் உங்களை பார்க்க வேண்டும், உங்களோடு பேச வேண்டும் என உங்கள் அன்பு காதலி நச்சரிப்பாள். இதன் பின்னடைவில், உங்கள் வேலையை கண்டு நீங்க உச்சுகொட்டும் நேரமும் வரும். அதனால், சிங்களாக இருங்கள், ஜாலியாக இருங்கள்!

கிப்டா அப்படினா?

கிப்ட் ஷாப் செலவுகள்'ன்னு உங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை நீங்கள் ஒதுக்கியே ஆகா வேண்டும். மாதம் தவறாது காதல் பரிசுகள் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அதே, நீங்கள் சிங்களாக இருந்தால்... கிப்ட்டா அப்படினா? என்று கூறிக்கொண்டு சந்தோசமாக இருக்கலாம்.

உலகக்கோப்பை 2௦15

சிங்களாக இருப்பதில் நீங்கள் அடையப் போகும் மாபெரும் பயன் இதுவாகத்தான் இருக்கும். பகல் நேர ஆட்டமோ, இரவு நேர ஆட்டமோ... இந்த வருட உலகக்கோப்பையின் முதல் ஆட்டத்த்சில் இருந்து இறுதி ஆட்டம் வரை எந்த தொல்லையும் இல்லாமல் பார்க்கலாம். இப்போது சொல்லுங்கள், இந்த வருட காதலர் தினம் அன்று ஒண்டிக்கட்டையாய் இருக்கமேன்னு வருத்தப் படப் போறீங்களா? இல்ல சிங்களாக சிங்கம் போல் இருக்கமேன்னு கர்ஜிக்க போறீங்களா!!!

English summary

Be Happy To Be A Single On Valentine Day

Here from this article you can know about the happiness of being happy to be a single on valentine day
Story first published: Wednesday, February 11, 2015, 17:04 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter