For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அன்னையர் தினம் ஸ்பெஷல்: அம்மாவைக் குஷிப்படுத்த 10 வழிகள்!

By Karthikeyan Manickam
|

ஆண்டுதோறும் மே 11-ஆம் தேதி அன்னையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. எந்த வயதிலும் சரி, இவ்வுலகில் கடவுளின் சிறந்த படைப்பு எது என்று கேட்டால் அது அம்மாதான்னு சொல்லலாம். நாம் துன்பத்தில் தவிக்கும்போதும் சரி, துயரத்தில் துவழும்போதும் சரி, நம்மைத் தூக்கி நிறுத்துபவள் தாய்.

அம்மா என்றால் அன்பு... அம்மான்னா சும்மா இல்லேடா... அவள் அன்புக்கு எல்லை இல்லை, வரைமுறை இல்லை, எந்த ஒரு நிபந்தனையும் இல்லை. நம் முகத்தில் புன்னகையை வரச் செய்வது தாயின் அன்பு.

அத்தகைய தாய்க்கு, அந்தத் தாயின் அன்புக்கு நாம் என்ன கைமாறு செய்யப் போகிறோம்? நமக்கும் நம் குடும்பத்துக்கும் தாய் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்த நமக்குக் கிடைத்துள்ள சந்தர்ப்பம்தான் அன்னையர் தினம். இந்த 2014 அன்னையர் தினத்தில், தன் ஆயுசுக்கும் நம் தாயை மகிழ்விக்கும் வகையில் இந்த 10 சிம்பிள் வழிகளைக் கடைப்பிடிப்போமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெளியில் அழைத்துச் செல்வோம்

வெளியில் அழைத்துச் செல்வோம்

ஆண்டு முழுவதும் நமக்காக உழைக்கும் நம் தாயை அன்று ஒரு நாளாவது பார்க், பீச் என்று வெளியே கூட்டிச் சென்று குஷிப்படுத்தலாமே!

நம் நேரத்தை தாய்க்கு செலவிடுவோம்

நம் நேரத்தை தாய்க்கு செலவிடுவோம்

அன்று நாம் எவ்ளோ பிஸியாக இருந்தாலும் சரி, எல்லா வேலைகளையும் தூக்கிப் போடுவோம். நம் தாய்க்கு மட்டும் அன்று நம் பொன்னான நேரத்தை ஒதுக்குவோம்.

தாய்க்குத் தோள் கொடுப்போம்

தாய்க்குத் தோள் கொடுப்போம்

நாம் துவழும் போது நம்மைத் தூக்கிவிட்ட தாய் அன்று ஒரு நாளாவது நம் தோளில் சாய்ந்து கொள்ளட்டும். அவளுக்காக நாம் இருக்கிறோம் என்பதை உணர்த்துவோம்.

தாய்க்கு உதவுவோம்

தாய்க்கு உதவுவோம்

ஆண்டு முழுவதும் நமக்கு ஆக்கிப் போட்ட தாய்க்கு அன்று ஒரு நாளாவது நாம் சமைத்துப் போடுவோமே! வீட்டு வேலைகளிலும் அவளுக்கு நாம் உதவினால் அவள் உள்ளம் மகிழுமே!!

மனம் விட்டுப் பேசுவோம்

மனம் விட்டுப் பேசுவோம்

நம் தாயுடனான கடந்த கால சம்பவங்களை எல்லாம் ஞாபகப்படுத்துவோம். ஃபிளாஸ்பேக் நம் தாயை நிச்சயம் உற்சாகப்படுத்தும். அவளுடனான நம் பிணைப்பையும் வலுப்படுத்தும்.

கோமாளி ஆகுவோம்

கோமாளி ஆகுவோம்

சிறு வயதில் நாம் செய்யும் கோமாளித்தனத்தை, நம் தாயை விட வேறு யாரும் ரசித்திருக்க முடியாது. அதே கோமாளித்தனத்தை இப்போதும் கூச்சப்படாமல் செய்வோம். நம் தாய் இன்னும் ரசிக்கத்தான் செய்வாள்.

ஆஃபீசுக்கு லீவ் போடுவோம்

ஆஃபீசுக்கு லீவ் போடுவோம்

அன்னையர் தினத்தன்று மட்டுமல்ல. கூட ஓரிரண்டு நாள் லீவ் போட்டு நம் தாயுடன் நேரத்தை செலவு செய்தால் அவள் க்ளீன் போல்டுதான்!

தாயுடன் போட்டோ எடுப்போம்

தாயுடன் போட்டோ எடுப்போம்

அன்னையர் தினத்தன்று நாம் நம் தாயுடன் நின்று கண்டிப்பாக ஒரு போட்டோ எடுத்துக் கொள்வோம். ஒன்றென்ன, ஓராயிரம் எடுத்துக் கொள்ளலாம் என்கிறீர்களா? வெரிகுட்! இது நம் தாயை நிச்சயம் சந்தோஷப்படுத்தும்.

நம்மையும் கவனிக்க வைப்போம்

நம்மையும் கவனிக்க வைப்போம்

அன்னையர் தினத்தில் நம் தாய் நம்மை நம்மை மட்டுமே வெகு அக்கறையுடன் கவனித்தால் நாம் உண்மையிலேயே லக்கிதான்!

தாய் கைகளில் தஞ்சம் புகுவோம்

தாய் கைகளில் தஞ்சம் புகுவோம்

தாயின் அரவணைப்பைவிட சிறந்த இடம் இந்த உலகில் கிடையாது. அவள் கரங்களில் தஞ்சமடைந்தால் நாம் அவ்வளவு பாதுகாப்பாக இருப்பதை உணர முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Ways To Cherish Your Mother

Want to make your mother happy and cherish her, this Mothers Day? Then here are some of the best ways to cherish your mother and to draw a smile on her face.
Story first published: Saturday, May 10, 2014, 19:33 [IST]
Desktop Bottom Promotion