For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரேக்கப்பான சில நாட்களிலே புதிய காதலா? இப்படி ஒரு காதலை பண்றதுக்கு பண்ணாமலேயே இருக்கலாம்.

|

10 வருசமா காதலிச்சேன் ஆனா இப்போ விட்டுட்டுப் போயிட்டாங்க அப்டின்னு நண்பர்களிடம் புலம்பும்போது இருக்கிற வலி எவ்வளவு கொடுமையானது தெரியுமா? விட்டுட்டுப் போனவங்களுக்காக எதையெல்லாம் தன்னுடைய வாழ்க்கையில இழந்துருக்கோம் அப்டிங்கிறதை உணர்ந்து கதறி அழுகின்ற தருணமும் அதுவாகத் தான் இருக்கும்.

அடுத்து என்னப் பண்ணப் போறோம்னு தெரியாம நிற்கதியா நிற்கும் போது ஆறுதல் சொல்ல யாராச்சும் வரமாட்டாங்களா என உள்ளம் ஏங்குவது சாதரணமான விசயம் தான். உங்கள் பக்கம் தவறு இல்லையென்றால் நிச்சயம் ஒருத்தன்/ ஒருத்தி உங்களுக்காக வருவார். அப்போது உங்கள் மனம் இருகைகளையும் விரித்து உங்கள் வாழ்க்கையை வரவேற்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒன்னுக்கே வழியில்லை உங்களுக்கு மட்டும் எப்படிடா

ஒன்னுக்கே வழியில்லை உங்களுக்கு மட்டும் எப்படிடா

காதலிக்க ஒரு பெண்/ ஆண் கிடைக்கமாட்டாலா என்று நொந்து போயிருக்கிற சமூகத்தில் தான் பிரேக்கப்னு சொல்லிட்டு கொஞ்சம் நாள் கழிச்சு இன்னொரு காதலி/ காதலனோடு சுத்துகிற பாக்கியம் கிடைக்குதுன்னு படிக்கிற உங்களுடைய வயித்தெரிச்சல் எனக்கு புரியுது. இது எப்படி சாத்தியமாகிறதுன்னு 10 காரணங்களை இந்தக் கட்டுரையில் இணைத்திருக்கேன். படித்து அந்தக் காரணங்கள் உங்களுக்கு ஒத்துவருமான்னு பாருங்கள்.

மீள் உறவு

மீள் உறவு

காதல் தோல்வியிலிருந்து உங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு வெளிவந்து புதிய வாழ்க்கையைத் தொடங்குவது தான் மீள் உறவோட அர்த்தம். ஆனால் நம்ம ஆட்கள் என்ன பண்றாங்கத் தெரியுமா. முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும் அப்டிங்கிற மாதிரி ஒரு காதல் தந்த வழியை இன்னொரு காதலால் தான் தரமுடியும்னு இன்னொரு காதலைத் தேடிப் போயிடுறாங்க.

இன்னொரு காதலைத் தேடிப்போவதற்கான காரணங்கள்

இன்னொரு காதலைத் தேடிப்போவதற்கான காரணங்கள்

காதலில் தோல்வியைச் சந்தித்திருந்தாலும் கூட தனிமையில் வாழமுடியாதவர்களாக இருக்கும் நபர்கள் இன்னொரு காதலை நோக்கி பயணிக்கிறார்கள். காதலிக்கத் தேர்வு செய்த நபர் தான் தவறாக இருக்குமே தவிர காதலை ஒரு போதும் அவர்கள் குறைக்கூற மாட்டார்கள். போதாக் குறைக்கு தேர்வில் அரியர் வைப்பது போல் காதல் தோல்விகளையும் பெருமையாக சொல்லிக் காலம் வந்துவிட்டது.

யாருடனும் டேட்டிங் செய்யத் தயார்

யாருடனும் டேட்டிங் செய்யத் தயார்

உங்கள் மீது நிஜமாகவே அக்கறைக் கொள்கிறாரா என்று கூடத் தெரியாமல் அக்கறைக் காட்டுவது போன்ற உணர்வு தோன்றினால் அவர்களுடன் ஊர் சுற்ற ஆரம்பித்து விடுவார்கள். அவர்கள் எதற்காக பழகுகிறார்கள் போன்ற எதையும் பார்த்து காதலிக்கத் தொடங்கமாட்டார்கள்.

புதிய காதல்

பழைய காதல் தொடராது என்ற எண்ணம் உடனடியாக ஏற்படாது. அதன் ஆரம்பக்கட்ட அறிகுறிகளே அதைத் தீர்மானித்து விடுகின்றன. அப்போதிலிருந்து வெளியிலிருந்து வரும் காதல் அழைப்புகளை உங்களுக்கு தெரியாமலேயே ஏற்க ஆரம்பித்துவிடுகிறீர்கள். பழைய காதல் பிரேக்கப் ஆன ஓரிரு வாரங்கள் கடுமையான மன உளைச்சலில் இருப்பீர்கள். அப்போது நம்பிக்கையூட்டும் விதமாக அந்த புதிய நபர் இருப்பார். அது உங்களை நாம் அவரை காதலிக்கிறோம் என உங்கள் மூளைக்கு உணர வைக்கிறது. உங்கள் காதலை வெளிப்படுத்த ஆரம்பிக்கிறீர்கள்.

சுலபமாக காதலிப்பீங்க

சுலபமாக காதலிப்பீங்க

புதுசா பேசி பத்து நாள் கூட ஆகியிருக்காது. பழைய காதல் தோல்வியின் வடு கூட ஆறியிருக்காது. ஆனால் பேசுன கொஞ்ச நாளிலே காதலை ஒப்புக் கொள்கிற பக்குவம் உள்ள ஆட்கள் இங்க நிறைய பேர் இருங்காங்க.. முக்கிய உங்களுடைய காதல் துணைக்கு பழைய காதல் துணையைப் பற்றி நன்கு அறிந்து தான் உங்கள் காதலையே ஓகே சொல்லிருப்பாங்க.

காதல் உறவு வேகமாகவும் நகரும், மெதுவாகவும் நகரும்

காதல் உறவு வேகமாகவும் நகரும், மெதுவாகவும் நகரும்

புதியதாக காதலிப்பதாக சொல்லிக் கொள்வார்கள் ஆனால் ஒரு போதும் அவர்களுக்குள் காதல் மலர்ந்திருக்காது இந்தச் சூழ்நிலையில் அவர்களின் காதல் வாழ்க்கை மிக வேகமாகவும் அதே சமயத்தில் திடீரென்று மிக மெதுவாகவும் நகரும்.

திரிஷா இல்லன்னா நயன்தாரா

திரிஷா இல்லன்னா நயன்தாரா

உங்கள் பழைய காதலியிடம் உன்ன விட அழகா, அறிவா இன்னொரு புதிய காதலியை பிடித்துக் காட்டுவேன் என்று சபதம் மேற்கொள்ளும் பழக்கம் இன்னும் சிலருக்கு உள்ளது. இதற்காக வலை வீசி மீனைப் பிடிப்பதைப் போல் ஒரு பெண்ணை பிடித்து பழைய காதலியின் முகத்தின் முன் நிறுத்துவார்கள். அப்போது உங்கள் பழைய காதலியின் முகத்தில் கறியைப் பூசிவிட்டதாக நினைப்பீர்கள்.

 வேணும் ஆனா வேணாம்

வேணும் ஆனா வேணாம்

பழையக் காதல் தலைவலியை தந்தது என்றுதான் புதிய காதலை நோக்கி வந்திருப்பார்கள். வருவதற்கு முன் அவருக்காக எந்த அர்ப்பணிப்பையும் செய்துவிடக்கூடாது என்பதை நன்கு அறிந்தவர்கள். ஆகையால் தனிமையில் இருக்கும் போது புதிய காதல் துணையை உடன் வைத்துக் கொள்வது சந்தோசமாக இருக்கும் போது கண்டுக்கொள்ளாமல் போவது என பந்தாக் காட்டுவார்கள்.

 உடலுறவு

உடலுறவு

இவ்வகை காதலர்களிடம் எல்லாமே சீக்கிரம் முடிந்துவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதே போல் தான் உடலுறவும். அதற்காக ஒருபோதும் காத்திருக்க தயங்கமாட்டார்கள். பழைய காதல் கல்யாணம் என்ற பேச்சைத் தொடங்கியவுடன் தான் பிரிந்திருக்கும். எனவே அங்கிருந்தோ அல்லது அதற்கு கட்டத்திலிருந்து தான் வாழ்க்கையை தொடங்க நினைப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Warning Signs That You're In A Rebound Relationship

The aftermath of a breakup is traumatic, especially if it is a long-term relationship. It leaves you with intense pain and negative feelings. When someone walks into your life at this juncture, seems to nurse your emotional wounds and support you, you welcome them with open arms.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more