Latest Updates
-
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...! -
இந்த 4 ராசிக்காரங்க சாத்தானின் செல்ல குழந்தைகளாம்... தீய குணங்கள்தான் இவங்ககிட்ட அதிகமா இருக்குமாம்,,,!
ஆண்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பாத பெண்கள்!!!
திருமணம் என்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியமான தருணம். ஏனெனில் ஒருவரை திருமணம் செய்து கொண்டால், அவருடன் தான் வாழ்நாள் முழுவதும் இருக்கப் போகிறோம். இது காதல் திருமணம் செய்து கொள்பவராக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஏனென்றால் காதல் செய்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்யும் போது, காதலிக்கும் போதே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வதால், பிரச்சனை இல்லை. ஆனால் பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து வைக்கும் போது, திருமணம் செய்து கொள்பவரைப் பற்றி ஒன்றும் தெரியாததால், அப்போது கவனமாக இருக்க வேண்டும்.
பொதுவாக பெற்றோர்கள் செய்து வைக்கும் திருமணத்தில், பெண் வீட்டார் தான் மாப்பிள்ளையைப் பற்றி நிறைய விசாரணை செய்வார்கள். ஆனால் தற்போது ஆண்களும் தங்களுக்கு வரும் மனைவியின் குணம் இப்படி இருக்க வேண்டுமென்ற எண்ணத்தைக் கொண்டுள்ளார்கள். மேலும் அதற்கேற்றாற் போல் அமைந்தால் தான் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறார்கள்.
அனைவரும் ப்ளே பாய் அல்லது நண்பன் என்று நெருக்கமாக பழகும் ஆண்களுக்கு, தங்களுக்கு வரும் மனைவி இப்படி தான் இருக்க வேண்டுமென்ற ஆசை அதிகம் இருக்காது என்று நினைக்கிறோம். ஆனால் ஆண்கள் அப்படி ப்ளே பாய் போன்றும், நண்பன் என்று சொல்லி நெருக்கமாக பழகிவிட்டு செல்வதற்கு காரணம், அவர்களுக்கு பிடித்த பெண்ணாக நீங்கள் இல்லாதது தான்.
ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, அப்படிப்பட்ட ஆண்களையும் வளைத்துப் போடுவதற்கு, எந்த மாதிரியான குணங்கள் பெண்களிடம் இருக்கக்கூடாது என்று ஒருசில குணங்களைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து, அத்தகைய குணங்களை தவிர்த்தால், நிச்சயம் உங்களுக்கு நல்ல கணவன் கிடைப்பது உறுதி.

பொறாமை
பெண்களுக்கு பொறுமை இருக்கலாம். ஆனால் பொறாமை இருந்தால், அது ஆண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. மேலும் பொறாமை இருந்தால், அது திருமண வாழ்க்கையின் அழிவுக்கு தான் வழிவகுக்கும்.

ஆளுமை
பெண்களுக்கு ஆளுமைத் திறன் இருப்பது நல்லது தான். ஆனால் கணவனை அல்லது காதலனை எப்போதும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைக்க நினைத்தால், அது கெடுதலைத் தான் விளைவிக்கும். மேலும் ஆண்களுக்கும் இந்த மாதிரியான பெண்களை சுத்தமாக பிடிக்காது. அதுமட்டுமின்றி இத்தகைய பெண்களுடன் நட்பைக் கூட வைத்துக் கொள்ளமாட்டார்கள்.

எப்போதுமே உடன் இருக்க வேண்டும்
எப்போதுதே தன்னுடன் இருக்க வேண்டும், எங்கு சென்றாலும் என்னுடன் தான் செல்ல வேண்டும் என்று நினைக்கும் பெண்ணாக இருந்தால், அத்தகைய குணம் கொண்ட பெண்ணை ஆண்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பமாட்டார்கள்.

பெற்றோர் செல்லமாக இருப்பது
பெற்றோர்களின் செல்லமாக இருப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால் திருமணத்திற்கு பின்னரும், பெற்றோர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொண்டு, கணவனை டீலில் விட்டால், அத்தகைய பெண்களையும் திருமணம் செய்து கொள்ள விரும்பமாட்டார்கள். அதற்காக பெற்றோர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. கணவனுக்கு பெற்றோர்களுக்கு சமமான அளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமல்லவா!

அதிகமான டயட்
அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது தான். அதற்காக உடல் எடை அதிகரிக்கக்கூடாது, அழகு பாழாகக்கூடாது என்று அளவுக்கு அதிகமாக டயட்டில் இருக்கும் பெண்களையும் ஆண்களுக்குப் பிடிக்காது. ஏனெனில் இத்தகைய பெண்கள் கணவருடன் வெளியே சென்றாலும், கணவன் ஆசையாக வாங்கிக் கொடுத்தால், வேண்டாம் என்று சொல்வார்கள்.

மாற்றம்
ஆண்களுக்கு தன் மனைவிக்கு பிடித்தவாறு மாற வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதை கட்டாயப்படுத்தி, இப்படி தான் இருக்க வேண்டுமென்று கட்டளையிட்டால், அத்தகைய பெண்களை அவர்களுக்கு பிடிக்காது. அத்தகைய பெண்களை திருமணம் செய்து கொள்ளவும் விரும்பமாட்டார்கள்.

சுயநலம்
சுயநலவாதியாக இருந்தால் யாருக்குமே பிடிக்காது. அதிலும் கணவனிடமும் அத்தகைய சுயநலத்தை வெளிப்படுத்தினால், பின் அது வாழ்விற்கே முற்றுப்புள்ளி வைத்துவிடும். எனவே கணவனிடம் மட்டுமின்றி, எப்போது பொதுநலத்துடன் பழக கற்றுக் கொள்ளுங்கள்.

சார்ந்து வாழ்தல்
தற்போதைய காலத்தில் ஆண்களுக்கு தன்னைச் சார்ந்து வாழும் பெண்களை விட, தன்னால் முடியும் என்று தைரியமாக வாழும் பெண்களைத் தான் பிடிக்கும். அதற்காக அளவுக்கு அதிகமான தைரியமும் இருக்கக்கூடாது. ஏனெனில் அதுவே ஆபத்தில் முடியும்.



Click it and Unblock the Notifications











