Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு விபத்தும் நடக்க வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
Aadi Month Rasipalan 2026: ஆடி மாதத்தில் கோடிகளை குவிக்கப் போகும் 5 ராசிக்காரங்க இவங்க தான்! -
ஜூலை 16-ல் சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், வெற்றியையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்.. -
நியூமராலஜி படி இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களின் தோற்றம் மட்டுமல்ல ஆன்மாவும் அழகானதாக இருக்குமாம் -
உங்க பல் மஞ்சளா இருக்கா? வெள்ளையாக்க இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
1/2 கப் கடலைப்பருப்பு இருந்தா டக்குனு இந்த குருமாவை செய்யுங்க - இட்லி, தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வாழைப்பழமும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
AC ரிமோட்டில் நீங்கள் செய்யும் இந்த தவறு உங்க கரண்ட் பில்லை தாறுமாறா அதிகரிக்குமாம் - கரெக்ட்டா யூஸ் பண்ணுங்க -
ஜூலை 07-ல் வக்ர புதனால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண கஷ்டம் குறைந்து செல்வம் பெருகும்..
இடையூறாக இருக்கும் பெற்றோர்களை சமாளிப்பதற்கான டிப்ஸ்....
உலகிலேயே பெற்றோர்கள் தான் அதிகமான அன்பு வைப்பவர்கள். அவர்களது அன்புக்கும், அக்கறைக்கும் ஈடு இணை எவரும் வர முடியாது. அத்தகைய பெற்றோர்கள் தன் குழந்தை நன்கு சந்தோஷமாக, எந்த பிரச்சனையுமின்றி இருக்க வேண்டுமென்று நினைத்து, எந்த ஒரு விருப்பமான செயலை செய்ய நினைக்கும் போதும், அந்த நிலையில் நிறைய அறிவுறைகளைக் கூறுவார்கள். சிலர் அவ்வாறு எந்நேரமும் இடையூறு தருவது போல் கூறும் அறிவுரைகளைப் பொறுக்க முடியாமல், பெற்றோர்களை எதிர்த்து பேசுவது, சில நேரங்களில் வெறுப்பது என்றெல்லாம் இருப்பார்கள்.
ஆனால் அவ்வாறு பெற்றோர்கள் தங்கள் நலனைக் கருதி கூறும் அறிவுரைகளின் போது எரிச்சல் அடையாமல், அவர்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையிலும், அதனால் காயமடையும் தம் மனதை சமாதானப்படுத்தும் வகையிலும் நடக்க வேண்டும். அதுமட்டுமின்றி சில நேரங்களில் பெற்றோர்களிடம் தமது கருத்துக்களையும் பொறுமையாக எடுத்து சொல்ல வேண்டும்.
சரி, இப்போது அந்த மாதிரி பெற்றோர்கள் அடிக்கடி அறிவுரை கூறினாலோ அல்லது எதிலும் இடையூறாக இருந்தாலோ, அப்போது அவர்களை எப்படி சமாளிப்பது என்று சில டிப்ஸ்களை பார்ப்போமா!!!

ஒரு காதில் வாங்கி, மறு காதில் விடலாம்
கடவுள் இரண்டு காதுகள் கொடுத்தது எதற்காக தெரியுமா? நல்ல விஷயங்களை கேட்டு கொண்டு, கெட்ட விஷயங்களை மறு காதின் வழியாக விட தான். ஆகவே பெற்றோர்கள் ஏதேனும் அறிவுறை கூறும் போது, அப்போது பொறுமையாக கேட்டுக் கொண்டு, அவர்கள் சொன்ன நல்லதை கேட்டு, கெட்டதை மறந்துவிட வேண்டும்.

பணிவாக நடந்து, பின் சொல்ல வேண்டும்
பெற்றோர்கள் கோபமூட்டும் வகையில் அறிவுறுத்தும் போது, கோபப்பட்டு குரலை உணர்த்தி பேசாமல், அவர்களிடம் பணிவுடன் "நீங்கள் பேசுவது எரிச்சலூட்டுவதாக உள்ளது" என்று வெளிப்படையாகவும் பணிவுடனும் சொன்னால், பெற்றோர்கள் புரிந்து கொள்வார்கள்.

தனிப்பட்ட விருப்பத்தை கூற வேண்டும்
எப்போது பெற்றோர்கள், உங்களது விருப்பத்திற்கு எதிராக நடந்து, அவர்கள் விரும்பிய படி உங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனரோ, அப்போது அத்தகைய செயல்களுக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு பெற்றோர்களிடம் தங்களது விருப்பத்தை சொல்லி, "என் வாழ்க்கை எனக்கு பிடித்தவாறு இருக்க வேண்டும்" என்று ஆசைப்படுவதாகவும் வெளிப்படையாக சொல்ல வேண்டும்.

எதையும் குறுட்டுத்தனமாக நம்பக்கூடாது
பெற்றோர்களுக்கு எப்போதும் ஒருவித சுயநலம் இருக்கும். அது தன் மகன்/மகளை யாருக்கும் எளிதில் விட்டு தரமாட்டார்கள். அதுவும் வீட்டிற்கு வரும் மருமகன்/மருமகளை பிடிக்காவிட்டால், அவர்களைப் பற்றி விஷமாக கக்கி, மனதை மாற்ற நினைப்பார்கள். ஆனால் அப்போது மனம் மாறாமல், தெளிவாக உண்மையை தெரிந்து கொண்டு எதையும் நம்ப வேண்டும்.

உணர்ச்சிவசமாக பேசுவார்கள்
சில பெற்றோர்கள் உணர்ச்சசிவசமாக பேசி காரியத்தை சாதிப்பார்கள். அப்போது மன அழுத்தம் கொண்டு பெற்றோர்களுக்காக எதையும் செய்யாமல், வெளிப்படையாக அவர்களிடம் "இவ்வாறெல்லாம் செய்து காரியத்தை சாதிக்கலாம்" என்று நினைக்க வேண்டாம் என்று வெளிப்படையாக சொல்லி, அவர்களது புத்தியை மாற்றுங்கள். இல்லாவிட்டால், அவர்கள் உணர்ச்சிவசமாக பேசியே அனைத்திலும் வெற்றி பெறுவார்கள்.

வாழ்வில் முன்னேற்றம்
வாழ்வில் முன்னேற்றம் அடைந்தாலே, பெற்றோர்கள் நமது பேச்சுக்கும் மதிப்பு அளித்து, எதையும் ஒப்புக் கொள்வார்கள். எனவே அதற்கு வாழ்வில் முன்னேறுவதற்கான முயற்சியில் கவனம் செலுத்த வேண்டும்.

தனியாக இருப்பதே சிறந்தது
பெற்றோர்களுடன் எப்போதும் சந்தோஷமாகவும், ஆரோக்கியமான உறவுமுறையை பின்பற்ற வேண்டும் என்று நினைத்தால், வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது, தனியாக சென்று விட வேண்டும். அது திருமணம் ஆனாலும் சரி, ஆகாவிட்டாலும் சரி. இதனால் எதையும் சுதந்திராமாக செய்யலாம்.

பெற்றோரை கவனிக்க வேண்டும்
என்ன தான் பெற்றோர்கள் கோபத்தை ஏற்படுத்தினாலும், அவர்கள் மீது இருக்கும் அக்கறையும் பாசமும் குறையக் கூடாது. எப்போதும் அவர்களை அனைத்து வகையிலும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மனம் விட்டு பேச வேண்டும்
பெற்றோரிடம் மனம் விட்டு பேசினால், எதற்கும் ஒரு நல்ல முடிவு கிடைக்கும். எனவே அவர்கள் உங்கள் சொந்த உணர்ச்சிகளில் குறுக்கிடும் போது, எரிச்சலாகவோ அல்லது கோபமூட்டுவதாகவோ இருந்தால், வெளிப்படையாக சொல்லிடவிட் வேண்டும். இதனால் இனிமேல் பெற்றோர்கள் சரியாக நடந்து கொள்வார்கள்.



Click it and Unblock the Notifications