For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சண்டை போட்டா சீக்கிரம் சமாதானமாயிடுங்க!

By Mayura Akilan
|

Relationship Tips for Couples
குடும்ப வாழ்க்கை சின்ன சின்ன கருத்து மோதல்களும், செல்ல சண்டைகளும் இருந்தால்தான் சுவாரஸ்யம் இருக்கும். ஆனால் சண்டை பெரிதானால் குடும்பத்தில் விரிசல்கள் ஏற்படும். எனவே குடும்பத்தில் சண்டை ஏற்பட்டால் ஈகோ பார்க்காமல் சமாதானம் ஆகுங்கள் என்று அறிவுரை கூறுகின்றனர் நிபுணர்கள்.

அமைதியாக இருக்காதீர்கள்

குடும்பத்தில் சண்டை வந்து ஒருவரை ஒருவர் குறை கூறி தீர்த்த பின்னர் முகத்தை திருப்பிக் கொள்ளாதீர்கள். யாராவது ஒருவர் சமாதானம் ஆகுங்கள். அதுதான் குடும்பத்திற்கு நல்லது. பேசாமல் இருந்து விட்டால் அதுவே பிரச்சினைக்கு காரணமாகிவிடும். மெளனம் என்பது ஒரு கூர்மையான ஆயுதம். அதனை முறையான சரியான விஷயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கணவன்-மனைவிக்குள் சண்டை வரும் சமயத்தில் இருவரும் அமைதியாக இருப்பது பெரும் ஆபத்தாகிவிடும்.

சாத்தான் கூடாரம்

அமைதியாக இருந்தால் கண்டதையும் நினைத்து மனது குழம்பும். மூளையில் சாத்தான் வந்து அமர்ந்து கண்டதையும் ஓதும். காதலிக்கும் போது நடந்த விஷயங்கள் எல்லாம் நாடகமாகவும், இப்போது இருப்பதுதான் நிஜம் என்றும் எடுத்துக்காட்டும். மேலும் இதுவரை என்னென்ன குறைகள் அநீதிகள் இழைக்கப்பட்டிருக்கிறது என்று கெட்ட விஷயங்கள் மட்டுமே மனதில் திரைப்படமாக ஓடிக்கொண்டிருக்கும்.

ஈகோ வேண்டாம்

தம்பதியருக்கிடையே யார் பேசுவது என்பதில் ஈகோ வேண்டாம். ஏனெனில் ஈகோதான் அனைத்து பிரச்சினைக்கு காரணமாகிறது. இருவரும் பேசாமல் விட்டால் முதலில் யார் பேச்சை தொடங்குவது என்பதில் சங்கடங்கள் எழலாம்.

முதலில் யார் பேச்சைத் தொடங்குவது என்பதில் ஈகோ ஏற்பட்டால் இது வளர்ந்து வெட்ட முடியாத பெரிய மரமாக மாறிவிடும். முதலில் அவர்தான் பேசவேண்டுமென இவரும், இவர்தான் பேசவேண்டுமென அவரும் கொஞ்ச நாள் காத்திருப்பார்கள். இருவரும் பேசாமல் இருக்கும் பொழுது, இனிமேல் அவராக வந்து பேசினாலும், பேசக்கூடாது என்ற நிலைமைக்குப் போய்விடுவார்கள். அதற்குப்பின் சமாதானம் என்பது மிகவும் கஷ்டப்பட்டு அடைய வேண்டிய விஷயமாகிவிடும்.

உடனே பேசுங்கள்

குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் திட்டுங்கள், சண்டை போடுங்கள், கட்டிப் பிடித்து உருளுங்கள், ஆனால் பேசாமல் மட்டுமே இருக்கவே இருக்காதீர்கள். பேசுங்கள், நிறைய பேசிக்கொண்டே இருங்கள். அதுதான் பிரச்சினைக்கு தீர்வு என்கின்றனர் நிபுணர்கள்.

English summary

Relationship Tips for Couples | சண்டை போட்டா சீக்கிரம் சமாதானமாயிடுங்க!

Becoming a couple is one of the most complex relationships in adulthood. It is also well known that being a couple can contribute to personal growth and self awareness . Romantic couples are a unique type of relationship that is different from friendships and family bonds because it is based on romantic love.
Story first published: Saturday, April 21, 2012, 15:37 [IST]
Desktop Bottom Promotion