For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாக்குவாதம் வாழ்க்கைக்கு ஆகாது!

By Mayura Akilan
|

Husband and wife fight
எப்ப பார்த்தாலும் சண்டைதான், எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் வீட்டில் நிம்மதியே இல்லை என்று புலம்புபவரா நீங்கள். உங்களுக்குத்தான் இந்த கட்டுரை... தம்பதியரிடையே இணக்கம் ஏற்படவும், குடும்பத்தில் அமைதி நிலவவும் எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

அவமதிப்பது ஆபத்து

பேச்சுவார்த்தை சின்னதாக தொடங்கும்போதே அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வழியை தேடவேண்டும். அதை விடுத்து ஒருவருக்கு ஒருவர் எதிர்பேச்சுப் பேசி அவமதிக்கும் வகையில் பேசுவது மிகச்பெரிய பிரச்சினைக்கு வழி வகுக்கும். எனவே பேசிய பின்னர் இப்படி பேசி விட்டோமே என்று நினைத்து வருந்துவதை விட எதையுமே பேசும் முன்பு யோசித்து பேசுவது இருவருக்குமே நல்லது.

உண்மையை கண்டறியுங்கள்

கண்ணால் காண்பதும் பொய், காதல் கேட்பதும் பொய் எனவே உங்கள் துணைவரைப் பற்றி உங்களுக்குத்தான் முழுதாக தெரிந்திருக்க வேண்டும். உங்க வீட்டுக்காரரை அங்கே பார்த்தேனே என்று பக்கத்தில ஒரு பொண்ணு இருந்திச்சே என்று யாராவது கொளுத்திப் போட்டால் அதையே சாக்காக வைத்து வீட்டுக்கு வந்த உடன் குடையக்கூடாது. அவராக ஏதாவது சொல்கிறாரா என்று அமைதி காக்கவும். இல்லையா வேறு டாபிக் ஏதாவது பேசிவிட்டு அதோடு சேர்த்து மெதுவாக கேட்கவும். அப்புறம் சண்டைக்கு ஏது வழி? எது உண்மை என்று தெரிந்து கொண்டால் மகிழ்ச்சியான ஆரோக்கியமான வாழ்க்கை உங்களுடையதுதான்.

முயலுக்கு மூன்று கால்

எப்பொழுதுமே நீங்கள் சொல்வதுதான் சரி என்று நினைக்காதீர்கள். உங்கள் பக்கம் தவறு நேரவும் வாய்ப்பு உள்ளது. எனவே வாழ்க்கைத்துணையானவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை காது கொடுத்து கேளுங்கள். ஈகோ என்பது குடும்பத்திற்குள் எட்டிப்பார்க்க ஆரம்பித்தால் மகிழ்ச்சி என்பது காணமல் போய்விடும். அப்புறம் யார் பெரியவர், யார் சொல்வது சரி என்று எப்போதும் வாதம் செய்யவேண்டியதுதான். நம்முடைய வாழ்க்கை மற்றவர்களுக்கு வேடிக்கையாகிவிடும்.

தினமும் எழுதுங்கள்

அன்றாடம் நடந்தவைகளை தினமும் எழுதுங்கள். அலுவலகமோ, வீடோ, எங்கே என்ன நடந்தது என்பதை எழுதி துணையின் பார்வைக்கு வைக்கலாம். அவர் அணிந்திருந்த உடை அழகாயிருந்தால் அதையும் கவிதையாய் குறிப்பிடலாம். தேவையற்ற பேச்சுக்கள் குறையும். உங்கள் செயல் யோசிக்க வைக்கும். சிறிய தவறென்றாலும் விட்டுக்கொடுத்துப் போங்கள். அப்புறமென்ன நீங்கள் தான் ஆதர்ச தம்பதிகள்.

English summary

4 Strategies to Stop Arguing | வாக்குவாதம் வாழ்க்கைக்கு ஆகாது!

Arguments with another individual notwithstanding the kind of relationship that you share with him or her are inevitable. Couples are no exception. Arguments with loved ones can get stressful over time especially, if they are ground on deep rooted issues.
Story first published: Monday, February 13, 2012, 12:57 [IST]
Desktop Bottom Promotion