For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எரியப்ப ரெசிபி / ஸ்வீட் தோசை செய்வது எப்படி

எரியப்ப கர்நாடகவின் பாரம்பரிய ஸ்வீட் உணவாகும். இது ஒரு உடுப்பி ஸ்டைல் ரெசிபி ஆகும். பண்டிகை மற்றும் சுப நிகழ்ச்சிகளின் போது செய்யப்படும் ஸ்வீட் உணவாகும். இதன் செய்முறை மற்றும் வீடியோ தொகுப்பு கொடுக்கப

Posted By: R. SUGANTHI Rajalingam
|

எரியப்ப கர்நாடகவின் பாரம்பரிய ஸ்வீட் உணவாகும். இது கர்நாடகவின் உடுப்பி பகுதியிலிருந்து வந்த ரெசிபி ஆகும். இந்த ஸ்வீட் தோசை அரிசி மாவு மற்றும் தேங்காய் இவற்றை அரைத்து அப்படியே வெல்லப் பாகு சேர்த்து சுடும் தோசை ஆகும்.

எரியப்ப குழந்தைகளுக்கென்றே தயாரிக்கப்படும் ரெசிபி ஆகும். இது இனிப்பா நல்லா பஞ்சு போல இருப்பதால் குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவர். தென்னிந்தியாவில் இதே மாதிரி பான் கேக் செய்து சாப்பிடுகின்றனர். இதனுடன் கொஞ்சம் தேன் சேர்த்தால் தோசையின் சுவை இன்னும் அருமையாக இருக்கும். எரியப்ப பேட்டர் மாவை அப்படியே எண்ணெய் விட்டு மொறு மொறுவென்று பொரித்து எடுத்தாலும் செம டேஸ்டியாக இருக்கும். இங்கே நாம் பான் கேக் ஸ்டைலில் ஆரோக்கியமான தோசை ரெசிபியை பார்க்க போறோம்.

அரிசியை ஊற வைத்து விட்டால் இந்த ஸ்வீட் தோசை அல்லது வெல்லம் தோசையை எளிதாக செய்து விடலாம். சமைக்கும் நேரமும் குறைவு அதே நேரத்தில் உங்கள் குழந்தைகளுக்கும் ரெம்ப பிடிக்கும். இதை வீட்டிலேயே செய்வதற்கு தேவையான செய்முறை விளக்கங்களும் அதற்கான வீடியோ ரெசிபியும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. வாங்க பார்க்கலாம்.

எரியப்ப ரெசிபி வீடியோ

எரியப்ப ரெசிபி
எரியப்ப ரெசிபி /ஸ்வீட் தோசை செய்வது எப்படி /வெல்லம் தோசை ரெசிபி /ஜேக்கரி தோசை ரெசிபி
Prep Time
6 மணி நேரம்
Cook Time
6 மணி நேரம்
Total Time
6 மணி நேரம் 30 நிமிடங்கள்

Recipe By: காவ்யா ஸ்ரீ

Recipe Type: ஸ்வீட்ஸ்

Serves: 4

Ingredients
  • அரிசி - 1/2 பெளல்

    தண்ணீர் - 1 கப்

    வெல்லம் - 1 கப்

    தேங்காய் துருவல் - 1 கப்

    ஏலக்காய் பொடி - 3/4 டேபிள் ஸ்பூன்

    நெய் - 1/2 கப்

Red Rice Kanda Poha
How to Prepare
  • 1. ஒரு பெளலில் அரிசியை எடுத்து கொண்டு 3/4 பங்கு கப் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

    2. இரவில் ஊற வைக்க வேண்டும். ஊறிய பின்னர் மீதமுள்ள தண்ணீரை வடிகட்டி விடவும்

    3. ஊற வைத்த அரிசியை மிக்ஸி சாரில் போட வேண்டும்.

    4. துருவிய தேங்காயையும் அதனுடன் சேர்த்து வழுவழுவென அரைத்து கொள்ளவும்.

    5. அதை ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளவும்

    6. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் வெல்லத்தை சேர்க்க வேண்டும்.

    7. உடனடியாக 1/4 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.

    8. வெல்லம் முழுவதுமாக கரைந்த பிறகு பாகுவை கொதிக்க விடவும்.

    9. இப்பொழுது அரைத்து வைத்துள்ள மாவில் வெல்லப் பாகுவை சேர்க்கவும்.

    10. இப்பொழுது ஏலக்காய் பொடி சேர்த்து மாவை நன்றாக பேட்டர் பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

    11. அடுப்பில் தோசைக் கல் அல்லது கடாயை வைத்து சூடானதும் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்ற வேண்டும்.

    12. மாவை எடுத்து ஊற்றி வட்ட வடிவில் அல்லது பான் கேக் வடிவில் தோசை வார்க்கவும்.

    13. ஒரு பக்கம் ப்ரவுன் கலர் ஆனதும் மறுபக்கம் திருப்பி இதே மாதிரி வேக விடவும்.

    14. நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு சூடாக பரிமாறவும்.

Instructions
  • 1.அரிசியை அரைப்பதற்கு முன்னாடி மீதமுள்ள தண்ணீரை முழுவதுமாக வடிகட்டுவது முக்கியம்.
  • 2.இதற்கு தயாரிக்கும் பேட்டர் ஆனது சாதாரண தோசை மாவை விட சற்று கெட்டியான பதத்தில் இருக்க வேண்டும்.
  • 3.அரிசியை இரவிலே ஊற வைப்பது மென்மையான தோசையை கொடுக்கும்.
  • 4.சில பேர்கள் தோசைக்கு பதிலாக பணியாரம் போன்ற எண்ணெய்யில் பொரித்த வகைகளை இந்த பேட்டர் கொண்டு செய்து சாப்பிடுவர்.
Nutritional Information
  • பரிமாறும் அளவு - 2 தோசைகள்
  • கலோரிகள் - 149 கலோரி
  • புரோட்டீன் - 3 கிராம்
  • கார்போஹைட்ரேட் - 22 கிராம்
  • சுகர் - 2.8 கிராம்
  • நார்ச்சத்து - 1 கிராம்

செய்முறை படத்துடன் விளக்கம் : எரியப்ப ரெசிபி செய்வது எப்படி

1. ஒரு பெளலில் அரிசியை எடுத்து கொண்டு 3/4 பங்கு கப் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

2. இரவில் ஊற வைக்க வேண்டும். ஊறிய பின்னர் மீதமுள்ள தண்ணீரை வடிகட்டி விடவும்

3. ஊற வைத்த அரிசியை மிக்ஸி சாரில் போட வேண்டும்.

4. துருவிய தேங்காயையும் அதனுடன் சேர்த்து வழுவழுவென அரைத்து கொள்ளவும்.

5. அதை ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளவும்

6. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் வெல்லத்தை சேர்க்க வேண்டும்.

7. உடனடியாக 1/4 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.

8. வெல்லம் முழுவதுமாக கரைந்த பிறகு பாகுவை கொதிக்க விடவும்.

9. இப்பொழுது அரைத்து வைத்துள்ள மாவில் வெல்லப் பாகுவை சேர்க்கவும்.

10. இப்பொழுது ஏலக்காய் பொடி சேர்த்து மாவை நன்றாக பேட்டர் பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

11. அடுப்பில் தோசைக் கல் அல்லது கடாயை வைத்து சூடானதும் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்ற வேண்டும்.

12. மாவை எடுத்து ஊற்றி வட்ட வடிவில் அல்லது பான் கேக் வடிவில் தோசை வார்க்கவும்.

13. ஒரு பக்கம் ப்ரவுன் கலர் ஆனதும் மறுபக்கம் திருப்பி இதே மாதிரி வேக விடவும்.

14. நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு சூடாக பரிமாறவும்.

[ 4.5 of 5 - 128 Users]
English summary

எரியப்ப ரெசிபி /ஸ்வீட் தோசை செய்வது எப்படி /வெல்லம் தோசை ரெசிபி /ஜேக்கரி தோசை ரெசிபி

Yereyappa is a traditional Karnataka-style sweet dish that hails from Udupi. It is also known as the sweet dosa and is prepared by grinding soaked rice and grated coconut and mixing it with jaaggeryjaggery syrup to form the batter. This batter is then made into a dosa.
Desktop Bottom Promotion