Latest Updates
-
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
கோதுமை ரவா பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க...
Wheat Rava Paniyaram With Coconut Chutney Recipe In Tamil: காலையில் டிபன் செய்ய உங்கள் வீட்டில் இட்லி, தோசை மாவு இல்லையா? ஆனால் உங்கள் வீட்டில் கோதுமை ரவை உள்ளதா? அப்படியானால் அந்த கோதுமை ரவையைக் கொண்டு பணியாரம் செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக தேங்காய் சட்னியை செய்யுங்கள். இந்த காம்பினேஷன் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும் மற்றும் சுவையாகவும் இருக்கும்.

உங்களுக்கு இந்த கோதுமை ரவா பணியாரமும், தேங்காய் சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை ரவா பணியாரம் மற்றும் தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பணியாரத்துக்கு...
* கோதுமை ரவை - 1 1/2 கப்
* கடலை மாவு - 3/4 கப்
* பச்சரிசி மாவு - 1/4 கப்
* கெட்டி தயிர் - 1/2 கப்
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* வெங்காயத் தாள் - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
* எண்ணெய் - தேவையான அளவு
தேங்காய் சட்னிக்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1
* பச்சை மிளகாய் - 3
* புளி - சிறிய துண்டு
* தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை ரவையை எடுத்துக் கொண்டு, அதில்
நீரை ஊற்றி, மூடி வைத்து 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* அதற்குள் சட்னி அரைத்துக் கொள்ளலாம். அதற்கு ஒரு வாணலியை அடுப்பில்
வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய
வெங்காயம், 3 பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு
வரும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் புளியை சேர்த்து, அத்துடன் துருவிய தேங்காயை சேர்த்து,
1 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து ஓரளவு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில்
சிறிது நீரை ஊற்றி அலசி சட்னியுடன் சேர்த்து கலந்து கொள்ள
வேண்டும்.
* அதன் பின் சட்னியை தாளிக்க ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய்,
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால்,
தேங்காய் சட்னி தயார்.
* ரவை நன்கு ஊறியதும், மிக்சர் ஜாரில், நீரை வடிகட்டிவிட்டு ரவையை
சேர்த்து, அத்துடன் கடலை மாவு, பச்சரிசி மாவு, கெட்டி தயிர் சேர்த்து
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் அரைத்ததை எடுத்துக் கொண்டு, அத்துடன்
பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், துருவிய தேங்காய்
ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின் அதில் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெங்காயத் தாள்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி, சுவைக்கேற்ப உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து
நன்கு கலந்து, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, மாவை நன்கு கிளறி விட்டு, மாவு மிகவும்
கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, அதன் குழிகளில் எண்ணெய்
ஊற்றி சூடானதும், மாவை ஊற்றி, முன்னும், பின்னும் வேக வைத்து
எடுத்தால், கோதுமை ரவை பணியாரம் தயார்.



Click it and Unblock the Notifications
