Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
1/2 கப் கோதுமை ரவையும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க..
Gothumai Rava Cutlet Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் சாப்பிட ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? அப்போது அவர்களுக்கு சற்று வித்தியாசமான, அதே சமயம் புதுமையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கோதுமை ரவையும், உருளைக்கிழங்கும் உள்ளதா?
அப்படியானால் அவற்றைக் கொண்டு கட்லெட் செய்து கொடுங்கள். இந்த கட்லெட் செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். இந்த கட்லெட்டை ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.

உங்களுக்கு கோதுமை ரவை கட்லெட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை ரவை கட்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை ரவை - 1/2 கப்
* எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
* உருளைக்கிழங்கு - 2
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* சாட் மசாலா - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
* துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கோதுமை ரவையை சேர்த்து, நல்ல மணம் வரும் வரை
வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 1 கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து கோதுமை ரவையை
வேக வைக்க வேண்டும்.
* கோதுமை ரவை வெந்ததும், அதை இறக்கி கிளறி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலை
நீக்கிவிட்டு, மசித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சாட் மசாலா, கரம் மசாலாவை
சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய இஞ்சி,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து பிசைந்து வைத்துள்ள கலவையை கொஞ்சம் எடுத்து உருட்டி,
தட்டையாக கட்லெட் போன்று தட்டிக் கொள்ள வேண்டும். இதேப் போன்று
அனைத்தையும் கட்லெட் போன்று தட்டி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு, முன்னும்
பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான கோதுமை ரவை கட்லெட்
தயார்.



Click it and Unblock the Notifications











