Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் நேரத்துல பசங்களுக்கு இப்படி செஞ்சு கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..
Wheat Flour Snacks Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் உங்கள் பசங்களோட பசியைப் போக்கும் வகையில் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அதுவும் வழக்கமாக செய்து கொடுக்கும் ஸ்நாக்ஸாக இல்லாமல், சற்று வித்தியாசமான சுவையுடைய ஸ்நாக்ஸை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் 1 கப் கோதுமை மாவு உள்ளதா? அப்படியானால் அந்த கோதுமை மாவைக் கொண்டு அருமையான சுவையில் சுரோஸ் செய்து கொடுங்கள். பொதுவாக சுரோஸை மைதா மாவில் தான் செய்வார்கள். ஆனால் கோதுமை மாவில் செய்யும் போது, சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு சுரோஸ் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுரோஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1 கப்
* தண்ணீர் - 1 கப்
* வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சர்க்கரை - 1/2 கப்
* பட்டைத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 கப்
நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீரே சூடேற்ற வேண்டும்.
* நீர் சூடானதும், அதில் 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து, அத்துடன்
2 டேபிள் ஸ்பூன் வெண்ணெயை சேர்த்து, நன்கு கிளறி விட வேண்டும்.
* நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் கோதுமை மாவை சேர்த்து, மாவு
ஒன்று சேரும் வரை கிளறி அடுப்பை அணைத்து விட வேண்டும்.
* பின் பாத்திரத்தின் சூட்டிலேயே கரண்டியால் நன்கு மாவை கிளறி விட
வேண்டும்.
* மாவானது நன்கு குளிர்ந்த பின், ஒரு பைபிங் பேக் அல்லது பால் கவரை
எடுத்து, அதன் முனைகளை கத்திரியால் கட் செய்ய வேண்டும்.
* அதன் பின் பிசைந்து வைத்துள்ள மாவை பைபிங் பேக் அல்லது பால் கவர்
உள்ளே வைத்து, நீள நீளத் துண்டுகளாக ஒரு தட்டில் பிழிந்து விட
வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிழிந்து வைத்துள்ள துண்டுகளை சேர்த்து
முன்னும் பின்னும் பொன்னிறமாக ப்ரை எடுத்து எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ப்ரை செய்து வைத்துள்ளதை கிண்ணத்தில் போட்டுக் கொள்ள
வேண்டும்.
* அதன் பின் சர்க்கரையை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து,
அத்துடன் பட்டை தூளை சலித்து சேர்த்து கிளறி, ப்ரை செய்து வைத்துள்ள
சுரோஸ் மேல் தூவி பரிமாறினால், சுவையான சுரோஸ் தயார்.



Click it and Unblock the Notifications









