Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
தினமும் காலையில் இந்த சூப்பை 1 கப் குடிங்க.. உடல் எடை 2 மடங்கு வேகத்துல குறையும்..
Weight Loss Makhana Soup Recipe In Tamil: நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதற்காக டயட்டில் உள்ளீர்களா? உங்களின் டயட்டில் உள்ள பெரும்பாலான உணவுகள் சுவையில்லாமல் மோசமாக இருக்குமா? இதனாலேயே உங்கள் நாக்கு செத்து போயுள்ளதா?
அப்படியானால் உங்களின் எடையைக் குறைக்கும் டயட்டிற்கு ஏற்ப ஒரு அருமையான காலை உணவு உள்ளது. அது தான் மக்கானா சூப். இந்த சூப் புரோட்டீன் அதிகம் நிறைந்தது. உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் அனைத்தையும் கொண்டது. இந்த சூப்பை தினமும் காலையில் 1 கப் குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் செயல்படுவதைக் காணலாம்.

உங்களுக்கு புரோட்டீன் அதிகம் நிறைந்த மக்கானா சூப்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புரோட்டீன் அதிகம் நிறைந்த மக்கானா சூப் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மாவு ஜவ்வரிசி - 1/2 கப்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
* நெய் - 1 டீஸ்பூன்
* வேர்க்கடலை - 1/4 கப்
* பாதாம் - 10
* முந்திரி - 10
* மக்கானா - 1 கப்
தாளிப்பதற்கு...
* நெய் - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
* உருளைக்கிழங்கு - 1 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தண்ணீர் - 3 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* எலுமிச்சை - பாதி
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1/2 கப் மாவு ஜவ்வரிசியை எடுத்து,
சிறிது நீரை ஊற்றி, 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதற்குள் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, சீரகம்
மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு வறுத்து இறக்கி, பொடித்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய்
ஊற்றி சூடானதும், வேர்க்கடலை சேர்த்து நன்கு வறுத்து ஒரு தட்டில்
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியில் உள்ள நெய்யில் பாதாம், முந்திரி சேர்த்து
அதையும் வறுத்து, வேர்க்கடலையுடன் சேர்த்து குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் மக்கானாவை சேர்த்து, அதையும் 2 நிமிடம் வறுத்து, ஒரு
தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் நெய்
ஊற்றி சூடானதும், சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய்
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கை சேர்த்து, சிறிது
உப்பு தூவி நன்கு வதக்கினால், உருளைக்கிழங்கு வேகமாக
வெந்துவிடும்.
* பின்பு அதில் ஊற வைத்த மாவு ஜவ்வரிசியை சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் 3 கப் நீரை ஊற்றி கிளறி, மஞ்சள் தூள் மற்றும் தக்காளியை
சேர்த்து கிளறி, மூடி வைத்து, 2-3 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க
வேண்டும்.
* சூப் நன்கு கொதித்து, ஜவ்வரிசியும், உருளைக்கிழங்கும்
வெந்துவிட்டால், அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
* பிறகு அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, பாதாம், வேர்க்கடலை
மற்றும் மக்கானாவை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக வறுத்து பொடித்து வைத்துள்ள மிளகு சீரக பொடியை சேர்த்து
கிளறி, மூடி வைத்து, 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, அதில் எலுமிச்சை சாற்றினை
சேர்த்து கிளறி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான மக்கானா சூப்
தயார்.



Click it and Unblock the Notifications