Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
முருங்கைக் கீரையை வைச்சு இந்த மாதிரி சூப் செஞ்சு குடிங்க... கொழுப்பும், எடையும் டக்குனு குறையும்...!
Murungai Keerai Soup Recipe In Tamil: முருங்கைக்கீரையில் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அதில் மிக முக்கியமான சத்தான இரும்புச் சத்து அதிக அளவில் உள்ளது. உலகளவில் பெரும்பாலான பெண்களுக்கு ரத்தச்சோகையும், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் அதிக அளவில் காணப்படுகிறது. நாம் தினசரி உணவில் முருங்கைக்கீரையை சேர்த்துக் கொண்டால் உடலுக்கு தேவையான இரும்புச்சத்தைப் பெறலாம். மேலும் இது உடல் எடை குறைப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. சரி வாங்க முருங்கை கீரையை வைத்து எப்படி சூப் செய்வது என பார்க்கலாம்.
அதுக்கு முன்னாடி இதையும் தெரிஞ்சுக்கோங்க. பொதுவாகவே முருங்கை கீரையில் கண்ணுக்குத் தெரியாத மண், தூசுகள் படிந்திருக்கும். அவற்றை நீக்க கீரையை பத்து நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைத்துக் கழுவ வேண்டும். பின் தண்ணீரின் மேற்பரப்பில் மிதக்கும் கீரையை கழுவி கைகளால் தனியே எடுத்து வைக்கவும். கீரை வகைகளை எப்போதும் தண்ணீரில் போட்டு கழுவும் போது வடிகட்டி எடுக்க கூடாது. அதற்கு காரணம் அதில் இருக்கும் மண், தூசிகள் தண்ணீரின் அடி பகுதியில் தங்கியிருக்கும்.

தேவையான பொருட்கள்:
- முருங்கை கீரை - ½ கப்
- பாசிப்பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
- சீரகம் - ½ டீ ஸ்பூன்
- வெந்தயம் - ½ டீ ஸ்பூன்
- மிளகு - 1 டீ ஸ்பூன்
- கிராம்பு - 2
- ஏலக்காய் - 2
- மராட்டி மொக்கு - 1
- கல் பாசி - சிறிதளவு (ஒரு இன்ச் அளவு)
- வெங்காயம் - 1
- தக்காளி - 1
- பூண்டு - 6 பல்
- இஞ்சி - சிறிதளவு (ஒரு இன்ச் அளவு)
- பச்சை மிளகாய் - 2
- தண்ணீர் - 2 கப்
கொதிக்க வைக்க:
- நெய் - 1 டீ ஸ்பூன்
- மிளகு - ¼ டீ ஸ்பூன்
- உப்பு - ¾ டீ ஸ்பூன்
- தண்ணீர் - தேவையான அளவு
தாளிக்க:
- நெய் - 2 டீ ஸ்பூன்
- முருங்கைக்கீரை - 2 டீ ஸ்பூன்
செய்முறை:
- வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ளவும்.
- வெங்காயத்தின் மேற்பரப்பில் கருப்பு நிற பூஞ்சை இருந்தால் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
- வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- நன்கு பழுத்த சிவப்பு தக்காளியை தண்ணீரில் கழுவி காம்பு பகுதியை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- பச்சை மிளகாயை சுத்தமாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- பாசிப்பருப்புடன் இரண்டு மூன்று முறை தண்ணீர் சேர்த்து அலசி எடுத்து கொள்ளவும்.
- பின் குக்கரில் கழுவிய பாசிப்பருப்பு, சீரகம், வெந்தயம், மிளகு, கிராம்பு, ஏலக்காய், மராட்டி மொக்கு, மற்றும் கல்பாசி சேர்க்கவும்.
- இதனுடன் வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், இரண்டு கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஆறு விசில் விட்டு இறக்கவும்.
- சூடு ஆறி விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்து பருப்புக் கலவையை நன்கு மசித்து தண்ணீரை வடித்து எடுத்து கொள்ளவும்.
- பின் முருங்கை கீரையை அரைத்து விழுதை வடிகட்டி எடுக்கவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் சேர்த்து உருக்கி கொள்ளவும்.
- பின் அதில் வடிகட்டிய பருப்பு, மற்றும் முருங்கைக்கீரை சாறை சேர்க்கவும்.
- இதனுடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு, மற்றும் மிளகுத்தூள் சேர்த்து சிறு தீயில் வைத்து 3 - 4 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும்.
- மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் சேர்த்து தாளிக்க கொடுத்துள்ள முருங்கைக் கீரையைச் சேர்க்கவும்.
- கீரையை மொறுமொறுவென பொரித்தெடுத்து சூப்பின் மீது சேர்த்தால் சுவையான முருங்கை கீரை சூப் ரெடி.



Click it and Unblock the Notifications







