Latest Updates
-
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
1 கப் கோதுமை ரவையும், 1 கப் ராகி மாவும் வெச்சு.. இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
Weight Loss Recipe Wheat Rava Ragi Adai In Tamil: எப்பவும் ஒரே மாதிரியான டிபனை செஞ்சு சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான ஒரு டிபனை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? வீட்டில் கோதுமை ரவையும், ராகி மாவும் இருந்தால், அவற்றைக் கொண்டு அருமையான சுவையில் அடை செய்யலாம். இந்த அடையில் நிறைய காய்கறிகளுடன், முருங்கைக்கீரையும் சேர்த்திருப்பதால், ருசியானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. இதற்கு ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை சட்னி அருமையாக இருக்கும்.
உங்களுக்கு கோதுமை ரவை ராகி அடையும், வெள்ளை சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை ரவை ராகி அடை மற்றும் வெள்ளை சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* கோதுமை ரவை - 1 கப்
* ராகி மாவு - 1 கப்
* பச்சரிசி மாவு - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* முட்டைக்கோஸ் - 3/4 கப் (பொடியாக நறுக்கியது)
* முருங்கைக்கீரை - 1 கப்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு தூள் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு
வெள்ளை சட்னிக்கு...
* முழு தேங்காய் - 1
* இஞ்சி - 1 சிறிய துண்டு
* பூண்டு - 2 பல்
* சின்ன வெங்காயம் - 5
* பச்சை மிளகாய் - 2
* புதினா - 10 இலைகள்
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் சம்பா கோதுமை ரவையை நீரில் 1 முறை கழுவிவிட்டு, பின்
அதில் நீரை ஊற்றி, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதற்குள் சட்னி செய்யலாம். அந்த சட்னிக்கு மிக்சர் ஜாரில் தேங்காய்,
இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், புதினா,
பொட்டுக்கடலை, சுவைக்கேற்ப உப்பு, 1/2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி, ஓரளவு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து சட்னியை தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை,
வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், ஹோட்டல்
ஸ்டைல் வெள்ளை சட்னி தயார்.
* பின்னர் ஊற வைத்த கோதுமை ரவையை மிக்சர் ஜாரில் நீருடன் அப்படியே
சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் ராகி மாவு, அரிசி மாவு மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, ஜாரில் சிறிது நீரை
ஊற்றி, அத்துடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம்,
முட்டைக்கோஸ் சேர்க்க வேண்டும்.
* பின் அதில் துருவிய கேரட், முருங்கைக்கீரை, சீரகத் தூள், சோம்புத்
தூள் சேர்த்து நன்கு அடை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள மாவை தோசை போன்று ஊற்றி, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும்
பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான கோதுமை ரவை ராகி அடை
தயார்.



Click it and Unblock the Notifications