Latest Updates
-
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
உடல் எடை மடமடன்னு குறைய உதவும் கருப்பு சுண்டல் தோசையும், பீட்ரூட் சட்னியும் - எப்படி செய்யணும் தெரியுமா?
Weight Loss Recipe Karuppu Sundal Dosa With Beetroot Chutney: நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா? அல்லது உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள நினைக்கிறீர்களா? அதற்காக டயட்டில் உள்ளீர்களா? ஆனால் உங்கள் டயட்டில் அவ்வளவு ருசியான உணவுகள் எதுவும் இருக்காதா? அப்படியானால் உங்கள் டயட்டில் கருப்பு சுண்டல் தோசையையும், பீட்ரூட் சட்னியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இது அருமையான காம்போ மட்டுமின்றி, உடல் எடையைக் குறைக்க உதவும் சத்தான உணவும் கூட.

இந்த கருப்பு சுண்டல் தோசையையும், பீட்ரூட் சட்னியையும் குறித்து உமா என்பவர் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு இந்த கருப்பு சுண்டல் தோசையையும், பீட்ரூட் சட்னியையும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருப்பு சுண்டல் தோசை மற்றும் பீட்ரூட் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கருப்பு சுண்டல் - 1 டம்ளர்
* இஞ்சி - சிறிய துண்டு
* பச்சை மிளகாய் - 1
* உப்பு - சுவைக்கேற்ப
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* இன்ஸ்டன்ட் ஓட்ஸ் - 2 டம்ளர்
* தண்ணீர் - சிறிது
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
பீட்ரூட் சட்னிக்கு...
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* வரமிளகாய் - 2
* பூண்டு - 4 பல்
* சின்ன வெங்காயம் - 25 கிராம்
* பீட்ரூட் - 1 (துருவியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் கருப்பு சுண்டலை நீரில் 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* 8 மணிநேரம் கழித்து, மிக்சர் ஜாரில் சுண்டலை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அத்துடன் இஞ்சி, பச்சை மிளகாய், சுவைக்கேற்ப உப்பு, சோம்பு,
இன்ஸ்டன்ட் ஓட்ஸ் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அத்துடன் பொடியாக
நறுக்கிய வெங்காயம் மற்றும் சிறிது கொத்தமல்லியைத் தூவி, தோசை மாவு
பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து தோசைக்கு வேண்டிய சட்னியை செய்யலாம். அதற்கு ஒரு வாணலியை
அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப்
பருப்பு உளுத்தம் பருப்பு சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய், வரமிளகாய், பூண்டு சேர்த்து வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும்
வரை வதக்க வேண்ணடும்.
* அதன் பின் அதில் துருவிய பீட்ரூட்டை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, பீட்ரூட்டின் பச்சை வாசனை போக வதக்கி
இறக்க குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
நன்கு அரைத்துக் கொண்டால், பீட்ரூட் சட்னி தயார்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும் கலந்து
வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து
எடுத்தால், சுவையான கருப்பு சுண்டல் தோசை தயார்.



Click it and Unblock the Notifications
