தினமும் காலையில் இந்த கஞ்சியை 1 கப் குடிங்க.. உடல் கொழுப்பு கரைந்து உடல் எடை சர்ர்-ன்னு வேகமா குறையும்..

Posted By:

Weight Loss Moongil Arisi Kanji Recipe In Tamil: நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதற்காக தினமும் உடற்பயிற்சி செய்வதோடு, டயட்டிலும் இருக்கிறீர்களா? உங்களின் டயட்டில் ருசியான உணவுகள் எதுவும் இல்லை என்று வருத்தப்படுகிறீர்களா? கவலை வேண்டாம். டயட்டில் இருக்கும் போது கஞ்சியை குடிப்பது மிகவும் நல்லது.

அதுவும் மூங்கில் அரிசியைக் கொண்டு கஞ்சி தயாரித்து குடிக்கும் போது, அது உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு, மூட்டு வலி, இடுப்பு வலி போன்றவற்றில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். முக்கியமாக இந்த கஞ்சியை சர்க்கரை நோய் உள்ளவர்களும் குடிக்கலாம்.

Weight Loss Moongil Arisi Kanji How To Make a Bamboo Rice Kanji

இப்படிப்பட்ட இந்த மூங்கில் அரிசி கஞ்சியை தினமும் காலையில் குடித்து வரும் போது, குடல் ஆரோக்கியம் மேம்படும் மற்றும் அதன் விளைவாக உடல் எடையும் குறைவதைக் காணலாம். முக்கியமாக இந்த கஞ்சியை குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். இதனால் உடல் வலுபெறும் மற்றும் ஆரோக்கியம் மேம்படும்.

உங்களுக்கு மூங்கில் அரிசி கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மூங்கில் அரிசி கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* மூங்கில் அரிசி - 1 டம்ளர்
* தண்ணீர் - 7 டம்ளர்
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* தயிர் - 1 கப்
* சின்ன வெங்காயம் - தேவையான அளவு (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மூங்கில் அரிசியை சேர்த்து நன்கு பொரிய வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு வறுத்த அரிசியை நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பிறகு கழுவிய அரிசியை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 7 டம்ளர் நீரை ஊற்றி, அரைத்ததையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அரிசியானது நன்கு வேகும் வரை மிதமான தீயில் வைத்து கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* அரிசி முக்கால்வாசி வெந்ததும், அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கிளறி, நன்கு 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* கஞ்சி சற்று கெட்டியாகி, அரிசி வெந்ததும், அதை இறக்கி, அதில் 1 கப் தயிரை நன்கு அடித்து ஊற்றி கிளறி, மேலே பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தைத் தூவினால், சுவையான மூங்கில் அரிசி கஞ்சி தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, September 25, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion