Latest Updates
-
நவம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஏமாற்றங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
டிசம்பர் 05-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி - இந்த 3 ராசிக்காரர்களின் கையில் பணம் குவியப்போகுது.. -
December 2026 Horoscope: டிசம்பர் மாதத்தில் தோல்விகளால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பன்னீர் யாக்னி - இதுக்கு வெங்காயம் தக்காளியே தேவைப்படாது.. எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கர்நாடகா ஸ்டைல் பூரி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வழக்கத்தை விட வீட்ல எல்லாரும் அதிகமா சாப்பிடுவாங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. டிசம்பர் மாசம் எப்படி இருக்கும்ன்னு சொல்றோம்... -
இந்த 5 ராசி ஆண்கள் சரியான 'அம்மா பிள்ளையாக' இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த பொருட்களை மிக்சி ஜாரில் தெரியாம கூட அரைச்சுராதீங்க - இல்லனா மிக்சி வீணாப்போயிரும் -
முகத்தில் பிக்மென்டேஷன் பிரச்சனையா? அப்ப இந்த தேங்காய் எண்ணெய் ஃபேஸ் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க.. -
திருப்பதியில் பக்தர்கள் ஏன் மொட்டையடிக்கிறார்கள்? அதற்குப் பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா?
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 நாள் குடிங்க.. உடல் எடை, பிபி, சுகர் எல்லாம் தானா குறையும்..
Weight Loss Vegetable Samba Rava Kanji Recipe In Tamil: தினமும் காலையில் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சத்தானதாகவும், அதே சமயம் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்குமாறான ஒரு காலை டிபனை செய்ய நினைத்தால், கஞ்சியை செய்து கொடுங்கள். அதுவும் சம்பா கோதுமை ரவையைக் கொண்டு, காய்கறிகள் சேர்த்து கஞ்சி தயார்த்து குடிக்கும் போது, வயிறும் நீண்ட நேரம் நிரம்பியிருக்கும், உடலும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். முக்கியமாக இந்த கஞ்சியை பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் சாப்பிடலாம்.

உங்களுக்கு இந்த வெஜிடேபிள் சம்பா ரவா கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜிடேபிள் சம்பா ரவா கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சம்பா கோதுமை ரவை - 1 கப்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/4
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 2
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 6 (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - 5 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சம்பா கோதுமை ரவையை நீரில் 2 முறை கழுவி, நீரை முழுமையாக
வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம், பட்சடை, கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பச்சை மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய கேரட் மற்றும் பீன்ஸ் சேர்த்து 2-3 நிமிடம்
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 5 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
கலந்து கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் கழுவி வைத்துள்ள சம்பா கோதுமை ரவையை சேர்த்து கிளறி,
குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியை சேர்த்து
கிளறினால், சுவையான வெஜிடேபிள் சம்பா கோதுமை ரவா கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications
