Latest Updates
-
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி, எடை மடமடன்னு குறையும்..
Weight Loss Kollu Barley Kanji Recipe In Tamil: நீங்கள் டயட்டில் உள்ளீர்களா? உங்களுக்கு இருப்பது நீர் உடம்பா? அப்படியானால் அப்படி கெட்ட நீரால் அதிகரித்த உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், அந்த நீரை வெளியேற்றும் பார்லியை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி, தசைகளை வலுப்படுத்த கொள்ளு பருப்பையும் உணவில் சேர்க்க வேண்டும்.

இப்படியான பார்லி மற்றும் கொள்ளு கொண்டு கஞ்சி தயாரித்து குடிக்கும் போது, உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி, உடல் எடை குறைந்து, தசைகள் இரும்பு போன்று இறுக்கமடைந்து வலுவடையும். முக்கியமாக இந்த கொள்ளு பார்லி கஞ்சியை எடையைக் குறைக்க நினைப்பவர்கள் மட்டுமின்றி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே குடிக்கலாம்.
இந்த கொள்ளு பார்லி கஞ்சி குறித்து ஃபுட்டீ தமிழா என்னும் இன்ஸ்டா பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த கொள்ளு பார்லி கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொள்ளு பார்லி கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கொள்ளு - 1/4 கப்
* பார்லி அரிசி - 1 கப்
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* மிளகு - 10
* இஞ்சி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 3 பல் (பொடியாக நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 6-7 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* ப்ராக்கோலி - சிறிது (நறுக்கியது)
* வாழைத்தண்டு - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 லிட்டர்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் கொள்ளு
பருப்பை சேர்த்து, அத்துடன் கழுவி காய வைத்துள்ள 1 கப் பார்லி அரிசியை
சேர்த்து நன்கு வறுத்து இறக்கி, நீரில் 2 முறை கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் நீரை ஊற்றி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெய்
ஊற்றி சூடானதும், சீரகம், மிளகு, பொடியாக நறுக்கிய இஞ்சி, 3 பல்
பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளிணை சேர்த்து வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் நறுக்கிய ப்ராக்கோலி மற்றும் வாழைத்தண்டை சேர்த்து 1
நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் ஊற வைத்துள்ள கொள்ளு மற்றும் பார்லியை நீரை
வடிகட்டிவிட்டு சேர்த்து நன்கு கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 1
லிட்டர் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 7-8 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கஞ்சியை மசித்துவிட்டால்,
சுவையான கொள்ளு பார்லி கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications