Latest Updates
-
World Alzheimer's Day 2026: அல்சைமர் நோய் பற்றிய 10 பொதுவான கேள்விகளுக்கு நரம்பியல் நிபுணரின் பதில்கள்! -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா?
காலையில் சிவப்பு அரிசியை வெச்சு இப்படி கஞ்சி செஞ்சு குடிங்க.. தொப்பையும் குறையும்.. உடலும் வலுபெறும்...
Weight Loss Red Rice Kanji Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் டிபனாக இருக்குமா? இப்படி இட்லி, தோசை சாப்பிட்டு உங்களுக்கு போரடித்துவிட்டதா? அதுவும் நீங்கள் உடல் பருமனைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் காலை வேளையில் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொண்டு வந்தால், சிறப்பான பலனைப் பெறலாம்.
உடல் எடையைக் குறைக்க சிவப்பு அரிசி பெரிதும் உதவி புரியும். ஆனால் இந்த சிவப்பு அரிசியை நிறைய பேருக்கு சரியாக சமைத்து சாப்பிட தெரியாது. அப்படியே செய்தாலும், சிவப்பு அரிசியைக் கொண்டு புட்டு செய்வார்கள். ஆனால் இந்த சிவப்பு அரிசியைக் கொண்டு காலையில் கஞ்சி தயாரித்து குடித்து வந்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதோடு, உடல் எடையும் குறையும்.

உங்களுக்கு சிவப்பு அரிசி கஞ்சியைக் கொண்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிவப்பு அரிசி கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிவப்பு அரிசி - 1/2 கப்
* உளுத்தம் பருப்பு - 1/4 கப்
* ஏலக்காய் - 2
* தண்ணீர் - தேவையான அளவு
* வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிவப்பு அரிசியை
போட்டு, மிதமான தீயில் வைத்து, நிறம் மாறும் வரை வறுத்து, ஒரு தட்டில்
போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியில் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து
இறக்கி, அதையும் குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த சிவப்பு அரிப்பு, உளுத்தம் பருப்பு
மற்றும் ஏலக்காய் சேர்த்து, ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அரைத்ததை ஒரு கிண்ணத்தில் போட்டு, அதில் 1/2 கப் நீரை ஊற்றி
கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர்
நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் கரைத்து வைத்துள்ளதை சேர்த்து
குறைவான தீயில் வைத்து, தொடர்ந்து கிளறி 3 நிமிடம் கொதிக்க வைக்க
வேண்டும்.
* பின் 2 நிமிடம் மீண்டும் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்பு
அதில் 2 டேபிள் ஸ்பூன் வெல்லத்தை சேர்த்து, அத்துடன் 1/2 கப் துருவிய
தேங்காயை சேர்த்து நன்கு கிளறி 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால்,
சுவையான சிவப்பு அரிசி கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications
