Latest Updates
-
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும்
இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு காலையில் குடிங்க.. கெட்ட கொழுப்பு கரைந்து, உடல் எடை அசுர வேகத்தில் குறையும்...
Weight Loss Kattuyanam Rice Murungai Keerai Kanji Recipe In Tamil: நீங்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? அதற்காக டயட்டில் உள்ளீர்களா? அப்படியானால் உங்கள் டயட்டில் எடை இழப்பை ஊக்குவிக்கும் உணவுகளை அதிகம் சேர்த்து வாருங்கள். அதுவும் சிறுதானிய வகைகள் மற்றும் அரிசி வகைகளைக் கொண்டு கஞ்சி தயாரிக்கும் போது, அதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்தால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்கும்.
மேலும், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களும் கரைந்து, உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். அப்படி உடல் எடையில் மாற்றத்தைக் காட்ட உதவும் ஒரு அரிசி தான் காட்டுயானம் அரிசி. இந்த அரிசியை கொண்டு கஞ்சி தயாரிக்கும் போது, சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட.

உங்களுக்கு காட்டுயானம் அரிசி முருங்கைக்கீரை கஞ்சி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காட்டுயானம் கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காட்டுயானம் அரிசி - 3/4 கப்
* தண்ணீர் - தேவையான அளவு + 4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு..
* தேங்காய் - 3/4 கப்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 3/4 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 7
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* முருங்கைக்கீரை - 2 கைப்பிடி
* தண்ணீர் - 1 கப்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மட்டன் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் காட்டுயானம் அரிசியை போட்டு, நீரில்
2-3 முறை கழுவி, பின் அதில் சுத்தமான நீரை ஊற்றி, குறைந்தது 7-8
மணிநேரம் ஊற வைக்க வேண்டும். முடிந்தால், இரவு தூங்கும் முன் ஊற
வைத்து, மறுநாள் காலையில் பயன்படுத்துங்கள்.
* அதன் பின் மறுநாள் காலையில் அரிசி ஊற வைத்த நீரை தனியாக ஒரு
பாத்திரத்தில் ஊற்றி, கஞ்சி செய்யும் போது பயன்படுத்திக் கொள்ள
வேண்டும்.
* அரிசி ஊறிய பின் மிக்சர் ஜாரில் ஊற வைத்த அரிசியை சேர்த்து
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பொடித்த காட்டுயானம் அரிசியை
சேர்த்து, அத்துடன் 4 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
கலந்து, குக்கரை மூடி, 7-8 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் தேங்காய், சோம்பு, சீரகம், சின்ன வெங்காயம்
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் அரைத்த தேங்காய் விழுது, 2
கைப்பிடி முருங்கைக்கீரை, 1 கப் தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் மட்டன்
மசாலா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* கஞ்சி மிகவும் கெட்டியாக இருந்தால், அதில் மீண்டும் சிறிது நீரை
ஊற்றி கிளறி, மிதமான தீயில் வைத்து நன்கு 10 நிமிடம் கொதிக்க வைக்க
வேண்டும். உப்பு சுவை பார்த்து அவ்வப்போது கலந்து விட வேண்டும். கஞ்சி
நன்கு கொதித்த பின், அடுப்பை அணைத்துவிட்டால், சுவையான காட்டுயானம்
அரிசி முருங்கைக்கீரை கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications











