Latest Updates
-
2K கிட்ஸ் அதிகம் விரும்பும் Slow Dating என்றால் என்ன? இளைஞர்கள் ஏன் டேட்டிங்கை விரும்புகிறார்கள் தெரியுமா? -
Gold rate in chennai continues to decline for 4th consecutive day despite Iran war -
சனிபகவான்-சுக்கிரனின் அரிய இணைப்பால் இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் நிகழப்போகுதாம்...! -
1/2 கப் கோதுமை ரவா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமாக வாகனம் ஓட்டணும்...! -
12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 3 ராசிகள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... -
வேர்க்கடலையுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்... -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் குவியப்போகுதாம்...! -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பாயாசம் செஞ்சு பாருங்க... அமிர்தம் மாதிரி இருக்கும்...! -
பிச்சிக்குது விற்பனை.. ரூ.10,499 க்கு 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்? | Vivo T4 Lite 5G 15 Percent Discount
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை அசுர வேகத்தில் குறையும்...
Weight Loss Kanji Recipe In Tamil: நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதற்காக டயட்டில் இருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் டயட்டில் உடல் எடையைக் குறைக்க உதவும் கஞ்சியை சேர்த்துக் கொள்ளுங்கள்.
அதுவும் கருப்பு கவுனி, கொள்ளு, பார்லி, பாசிப்பயறு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த கஞ்சி உடலில் உள்ள கெட்ட கொழுப்பு, கெட்ட நீர் போன்றவற்றை வெளியேற்றி, உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். குறிப்பாக இந்த கஞ்சியை தினமும் குடித்து வந்தால், ஆரோக்கியமான வழியில் உடல் எடையைக் குறைக்கலாம்.

உங்களுக்கு எடை இழப்புக்கு உதவும் கருப்பு கவுனி கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருப்பு கவுனி கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
கஞ்சி பவுடருக்கு...
* கருப்பு கவுனி அரிசி - 2 கப்
* கொள்ளு - 1 கப்
* பார்லி அரிசி - 1 கப்
* பாசி பயறு - 1 கப்
* கருப்பு உளுந்து - 1/4 கப்
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கஞ்சி செய்வதற்கு...
* தண்ணீர் - 2 கப்
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 4 (பொடியாக நறுக்கியது)
* முட்டைக்கோஸ் - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 3 பல் (பொடியாக நறுக்கியது)
* கஞ்சி பவுடர் - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கருப்பு கவுனி
அரிசியை சேர்த்து நன்கு வறுத்து ஒரு தட்டில் போட்டுக் கொள்ள
வேண்டும்.
* பின் அதே வாணலியில் கொள்ளு பருப்பை சேர்த்து அதையும் நன்கு நிறம்
மாற வறுத்து இறக்கி, கவுனி அரிசியுடன் சேர்த்து குளிர வைக்க
வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் பார்லி அரிசியை சேர்த்து நன்கு வறுத்து
இறக்கி, அதையும் தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பிறகு அதே வாணலியில் பாசி பயறை சேர்த்து நல்ல மணம் வரும் வரை
வறுத்து இறக்கி அதையும் தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கருப்பு உளுந்து, சீரகம், மிளகு, வெந்தயம்
ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து சற்று
கொரகொரவென்று அரைத்து, ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டுக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில்
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், பூண்டு ஆகியவற்றை
சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கஞ்சி பவுடரை சேர்த்து கட்டிகளின்றி கலந்து,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து
இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான கருப்பு கவுனி கஞ்சி
தயார்.



Click it and Unblock the Notifications











