Latest Updates
-
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்..
1 கப் வேர்க்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க... தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும்...!
Verkadalai Kurma Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் காலை அல்லது இரவு இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி போன்றவைதான் பிரதான உணவாக இருக்கும். இந்த உணவுகளுக்கு பெரும்பாலும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி போன்றவைதான் சைடிஷாக இருக்கும். புதிதாக ஏதாவது சைடிஷ் செய்ய ஆசைப்படுறீங்களா? அப்படினா இந்த வேர்க்கடலை கறியை ட்ரை பண்ணி பாருங்க.
வேர்க்கடலை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. வேர்க்கடலை எந்த வடிவத்தில் இருந்தாலும் நாம் விரும்பி சாப்பிடுவோம். வேர்க்கடலை சைடிஷ் என்றால் பொதுவாக அதனை வைத்து சட்னி மட்டும்தான் அரைக்க முடியும் என்று நாம் நினைத்திருப்போம். ஆனால் வேர்க்கடலையை வைத்து ஒரு அட்டகாசமான சைடிஷை செய்யலாம்.

இந்த வேர்க்கடலை கறி இட்லி, தோசை மற்றும் சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷாக இருக்கும், அதேசமயம் இந்த சைடிஷை செய்வது என்பது மிகவும் எளிதானதும் கூட. இந்த பதிவில் சூப்பரான வேர்க்கடலை கறியை எப்படி எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- நிலக்கடலை - ஒரு கப்
- நறுக்கிய சின்னவெங்காயம் - அரை கப்
- பச்சை மிளகாய் - 2
- ஏலக்காய் - 1
- சீரகம் - ஒரு டீஸ்பூன்
- கிராம்பு - 2
- இலவங்கப்பட்டை - 1
- துருவிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
- பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
- நறுக்கிய பூண்டு - அரை டீஸ்பூன்
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் - கால் ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
- நிலக்கடலையை நன்கு சுத்தம் செய்து விட்டு உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவைத்து இறக்கி வைத்துக்கொள்ளவும்.
- பின்னர், ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் அதில் பச்சை மிளகாய் கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய் மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் நறுக்கிய பூண்டு மற்றும் நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு வதங்கியதும் அதில் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும், மசாலா பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின்னர் ஏற்கனவே, வேகவைத்த நிலக்கடலையை இதில் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வேகவைக்க வேண்டும்.
- கிரேவி பதத்திற்கு வந்ததும் இதன்மீது துருவிய தேங்காயை தூவி இறக்கினால் வேர்க்கடலை கறி ரெடி.
- இத இட்லி, தோசை மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்துச் சாப்பிட அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
