Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
1 கப் வேர்க்கடலையும், கொத்தமல்லியும் இருந்தா இந்த மாதிரி சுருக்குனு சட்னி அரைங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
Verkadalai Kothamalli Chutney Recipe in Tamil: உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி அல்லது தோசைதான் செய்கிறீர்களா? இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கொத்தமல்லி உள்ளதா? அப்படியானால் கொத்தமல்லி சட்னி செய்யுங்கள். அதுவும் அந்த சட்னியை வழக்கமாக நீங்கள் செய்வது போன்று செய்யாமல், ஒருமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் இரண்டு ஸ்பெஷல் பொருட்களை சேர்த்து செய்யுங்கள்.

இந்த பொருட்களை சேர்த்து கொத்தமல்லி சட்னி செய்யும் போது வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட 2 இட்லியை எக்ஸ்ட்ரா சாப்பிடுவார்கள். அந்த அளவில் இதன் சுவை அருமையாக இருக்கும். மேலும் இந்த சட்னி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். ஒருமுறை இந்த மாதிரி மல்லி சட்னியை செய்தால், பின் எப்போதும் இப்படி தான் செய்வீர்கள். இந்த சட்னியின் நிறமும், வாசனையுமே அனைவரையும் சாப்பிடத் தூண்டும்.
உங்களுக்கு வித்தியாசமான கொத்தமல்லி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த கொத்தமல்லி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 ஸ்பூன் எண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- ½ ஸ்பூன் சீரகம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலைகள்
- 1 கப் வறுத்த, தோல் நீக்கிய வேர்க்கடலை
- 2 ஸ்பூன் தயிர்
- 5 பச்சை மிளகாய்
- தேவையான அளவு உப்பு
- 1 ஸ்பூன் புளிக் கரைசல்
தாளிக்க:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 2 வர மிளகாய்
செய்முறை:
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும், கடுகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
- பின்னர் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து வதக்கவும்.
- இலைகள் சுருங்கியதும் அடுப்பை அணைத்து பாத்திரத்தை இறக்கவும்.
- இதை ஆற வைத்து ஒரு மிக்சி ஜாருக்கு மாற்றவும்.
- பின் உடைத்த வேர்க்கடலை, தயிர், பச்சை மிளகாய், உப்பு மற்றும் புளிக் கரைசலை மிக்சி ஜாரில் சேர்க்கவும்.
- அரை கப் தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும்.
- சட்னி கெட்டியாக இருந்தால் மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் வர மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து பொரியவிடவும்.
- மிளகாய் நிறம் மாறியதும் இந்த தாளிப்பை சட்னி மீது கொட்டி நன்றாக கிளறினால் சுவையான வேர்க்கடலை கொத்தமல்லி சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications
