Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
வெண்டைக்காய் வாங்குனா.. ஒருமுறை இப்படி பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க..
Vendakkai Poriyal Recipe In Tamil: உங்கள் வீட்டில் இருப்பவர்கள் வெண்டைக்காய் சாப்பிடமாட்டார்களா? அதற்கு வெண்டைக்காயின் வழுவழுப்புத்தன்மை தான் காரணமா? அப்படியானால் அந்த வழுவழுப்புத்தன்மை இல்லாதவாறு சுவையாக வெண்டைக்காயை செய்யுங்கள். அதுவும் வெண்டைக்காயைக் கொண்டு பொரியல் செய்தால், இன்னும் அற்புதமாக இருக்கும்.
வெண்டைக்காயின் வழுவழுப்பு நீங்க வேண்டுமானால், அத்துடன் ஒரு பொருளை சேர்த்து பிரட்டி ஊற வைத்தால் போதும். அது என்ன வென்பதை இந்த ரெசிபியை படித்து தெரிந்து கொள்ளுங்கள். முக்கியமாக இப்படி வெண்டைக்காய் பொரியலை செய்யும் போது, பிடிக்காதவர்கள் கூட கேட்டு வாங்கி சாப்பிட்டு காலி செய்துவிடுவார்கள்.

உங்களுக்கு வழுவழுப்பில்லாத வெண்டைக்காய் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெண்டைக்காய் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெண்டைக்காய் - 1/2 கிலோ (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* புளிப்பில்லாத தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் வெண்டைக்காயை நீரில் கழுவிவிட்டு, அதன் முனைகளை
நீக்கிவிட்டு, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு நறுக்கிய வெண்டைக்காயை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு,
அத்துடன் சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், புளிப்பு
இல்லாத தயிரை சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து, மூடி வைத்து 1
மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து,
உளுத்தம் பருப்பு பொன்னிறமானதும், கறிவேப்பிலை மற்றும் வரமிளகாயை
சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் ஊற வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து நன்கு 5 நிமிடம்
மிதமான தீயில் வைத்து கிளறி விட வேண்டும்.
* பின் 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து ஈரப்பதம் போக வேக வைக்க
வேண்டும்.
* ஒருவேளை உங்களுக்கு மொறுமொறுப்பாக வேண்டுமானால், இன்னும் ஒரு 10
நிமிடம் குறைவான தீயில் வைத்து, வேக வைத்து இறக்கினால், சுவையான
வெண்டைக்காய் பொரியல் தயார்.



Click it and Unblock the Notifications











