Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
கோதுமை மிளகு தோசை
டயட்டில் இருப்போர் காலை வேளையில் எப்போதும் ஓட்ஸையே சாப்பிடாமல், சற்று கோதுமையையும் சேர்த்துக் கொள்வது மிகவும் சிறந்தது. அதற்காக சப்பாத்தி செய்து சாப்பிட வேண்டும் என்பதில்லை. கோதுமை தோசை போன்று, ஆனால் அதில் மிளகு, வெங்காயம் போன்ற பொருட்களை சேர்த்து கலந்து, தோசை செய்து சாப்பிடலாம்.
இந்த தோசைக்கு கோதுமை மிளகு தோசை என்று பெயர். இது டயட்டில் இருப்போருக்கு ஏற்ற ஒரு அருமையான காலை உணவு. சரி, இப்போது அந்த தோசை ரெசிபியைப் பார்ப்போமா!!!
இதுப்போன்று வேறு: மைதா-மோர் தோசை

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
அரிசி மாவு - 1/2 கப்
மிளகு - 1 டீஸ்பூன் (பொடி செய்து கொள்ளவும்)
சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, சீரகம், பொடி செய்த மிளகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், கலந்து வைத்துள்ள மாவை எண்ணெய் ஊற்றி தோசைகளாக ஊற்றி எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான கோதுமை மிளகு தோசை ரெடி!!!
Image Courtesy: suvayosuvai



Click it and Unblock the Notifications
