Latest Updates
-
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது!
தக்காளி கொத்தமல்லி சட்னி

இங்கு அந்த தக்காளி கொத்தமல்லி சட்னியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
தக்காளி - 2 (நறுக்கியது)
கொத்தமல்லி - 1/2 கப்
பச்சை மிளகாய் - 3
புளி - 1 சிறிய நெல்லிக்காய் அளவு
உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுத்தம் பருப்பு போட்டு பொன்னிறமாக வறுத்து, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, புளியை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்னர் தக்காளி மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து, தீயை குறைவில் வைத்து 2-3 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பிறகு கொத்தமல்லியை போட்டு பிரட்டி, கொத்தமல்லி வதங்கியப் பின் இறக்கி குளிர வைக்க வேண்டும்.
கலவையானது குளிர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து, ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும்.
இறுதியில், கடுகை தாளித்து, அத்துடன் சேர்த்தால், சுவையான தக்காளி கொத்தமல்லி சட்னி ரெடி!!!



Click it and Unblock the Notifications
