For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளுக்கான சூப்பரான உருளைக்கிழங்கு ரெசிபி

By Maha
|

உருளைக்கிழங்கை கொண்டு பலவாறு சமைக்கலாம். இத்தகைய உருளைக்கிழங்கு பலருக்கு மிகவும் பிடித்தமான உணவுப் பொருள். குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. எனவே இந்த உருளைக்கிழங்கை குழந்தைகளுக்கு வித்தியாசமான சுவையில் சமைத்து கொடுக்க நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள உருளைக்கிழங்கு ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள்.

இந்த ரெசிபியின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் காரம் மற்றும் புளிப்பு சேர்ந்திருப்பது தான். மேலும் இதனை பேச்சுலர்கள் கூட சமைத்து சாப்பிடலாம். இப்போது அந்த உருளைக்கிழங்கு ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போம்.

Tasty Aloo Recipe For Kids

தேவையான பொருட்கள்:

பேபி உருளைக்கிழங்கு - 250 கிராம் (வேக வைத்து, தோலுரித்தது)
சில்லி ஃப்ளேக்ஸ் - 2 டீஸ்பூன்
பூண்டு - 10 பல்
வறுத்த சீரகம் - 2 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
கருப்பு உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
தண்ணீர் - 1/4 கப்

செய்முறை:

முதலில் பூண்டு, வறுத்த சீரகம், சில்லி ப்ளேக்ஸ், மிளகு தூள் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து, 4-5 நிமிடம் மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.

பின் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட், மாங்காய் தூள், கருப்பு உப்பு சேர்த்து கிளறி, 3-4 நிமிடம் பிரட்டி விட வேண்டும்.

பின்பு அதில் தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் தண்ணீர் வற்றும் வரை வேக வைக்க வேண்டும்.

தண்ணீர் முற்றிலும் வற்றியதும், அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கி விட வேண்டும்.

English summary

Tasty Aloo Recipe For Kids

Tasty Aloo Recipe is an excellent side dish option if you want to make your kid eat healthy and take care of his taste-buds as well. Your kid will be definitely be delighted by this tangy treat. So, check out this tasty aloo recipe.
Story first published: Monday, November 25, 2013, 12:38 [IST]
Desktop Bottom Promotion