Latest Updates
-
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்!
வித்தியாசமான... சுண்டல் ரெசிபி
குளிர்காலத்தில் மாலை வேளையில் அதிகப்படியான குளிர்ச்சி இருப்பதால், அனைவரும் நன்கு சூடாகவும், காரமாகவும் ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்புவோம். அப்படி ஸ்நாக்ஸ் செய்ய நினைக்கும் போது, உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட்டால், உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை ஒரு அருமையான சுண்டல் ரெசிபியைக் கொடுத்துள்ளது. பொதுவாக சுண்டல் ரெசிபியில், காரம் மட்டும் தான் இருக்கும். ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள சுண்டல் ரெசிபியில் புளிப்பு, காரம் போன்றவை இருப்பதால், அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இப்போது அந்த இரண்டு வகையான சுவைகள் கலந்த சுண்டல் ரெசிபியைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
கருப்பு சுண்டல் - 1 கப் (4-5 மணிநேரம் ஊற வைத்தது)
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது)
தக்காளி - 1/2 கப்
பச்சை மிளகாய் - 1 (இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்)
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
சன்னா மசாலா - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை
முதலில் சுண்டலை நன்கு கழுவி, குக்கரில் போட்டு, அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, 1 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

செய்முறை
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

செய்முறை
அடுத்து தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து, 1 நிமிடம் வதக்கி, பின் மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மாங்காய் தூள், சன்னா மசாலா சேர்த்து 1 நிமிடம் கிளறி விட வேண்டும்.

செய்முறை
பின்பு வேக வைத்துள்ள சுண்டலை சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் சுண்டும் வரை அடுப்பில் வைத்து பிரட்ட வேண்டும்.

செய்முறை
தண்ணீரானது முற்றிலும் சுண்டியதும், அதில் கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
