Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
பன்னீர் குடைமிளகாய் மிளகு வறுவல்
பால் பொருட்களில் ஒன்றான பன்னீரில் நிறைய சத்துக்கள் உள்ளன. இத்தகைய பன்னீரை வைத்து நிறைய ரெசிபிக்கள் உள்ளன. பன்னீர் மிகவும் சுவை தரக்கூடிய ஒரு உணவுப் பொருள். அதிலும் பன்னீரை குடைமிளகாயுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான். மேலும் குடைமிளகாய்க்கும், பன்னீருக்கும் என்ன உறவுமுறை உள்ளதோ தெரியவில்லை, பெரும்பாலான பன்னீர் ரெசிபியில் குடைமிளகாய் நிச்சயம் இருக்கும்.
இதுவரை இந்த இரண்டு பொருட்களை வைத்து, மசாலா, குழம்பு என்று தான் செய்திருப்போம். ஆனால் இப்போது சற்று எளிமையான முறையிலும், விரைவில் செய்யக்கூடியதுமான வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போம். மேலும் இந்த வறுவல் மிகவும் காரசாரமான ஒன்று. இப்போது இத்தகைய மிளகு வறுவலை எவ்வாறு செய்வதென்று படிப்படியாகவும், தெளிவாகவும் கொடுத்துள்ளோம், அதைப் படித்து தெரிந்து கொண்டு, சமைத்து மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 கப் (துருவியது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன் (வறுத்து பொடி செய்தது)
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:

படி: 1
முதலில் மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

படி: 2
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சிறிது ஊற்றி, பன்னீரை போட்டு, சிறிது நேரம் வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

படி: 3
அதே வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

படி: 4
பின்னர் அத்துடன் வறுத்து வைத்துள்ள பன்னீர் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு வதக்க வேண்டும்.

படி: 5
பின்பு மிளகுப் பொடியைத் தூவி, அதில் போட்ட பொருட்கள் அனைத்தும் ஒன்று சேர கிளற வேண்டும்.

படி: 6
அனைத்தும் ஒன்று சேர்ந்ததும், அத்துடன் துருவி வைத்துள்ள குடைமிளகாயை சேர்த்து, நன்கு 2 நிமிடம் பிரட்டி, இறக்க வேண்டும்.

படி: 7
அதே சமயம், மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கீறி வைத்துள்ள பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

படி: 8
இப்போது சுவையான பன்னீர் குடைமிளகாய் மிளகு வறுவல் ரெடி!!! இதன் மேல் பொரித்து வைத்துள்ள பச்சை மிளகாயை வைத்து அலங்கரித்து, பரிமாற வேண்டும்.
Image Courtesy: Abhinaya Prabhu



Click it and Unblock the Notifications