Latest Updates
-
நாளைக்கு மறந்தும் இந்த பொருட்களை யாருக்கும் கொடுக்காதீங்க.. இல்ல வறுமை வாட்டி எடுத்துடும்! -
1 கப் பொட்டுக்கடலை இருந்தா தீபாவளிக்கு இந்த புது ஸ்வீட்டை செய்யுங்க - டேஸ்ட் அதிரிபுதிரியா இருக்கும் -
தீபாவளிக்கு பின் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரண களமா இருக்கப்போகுது.. -
உங்க குளிர்சாதனப் பெட்டியில் கூலிங் பிரச்சினை இருக்கா? அப்ப ஒரு பேப்பரை வைச்சு ஈஸியா இப்படி கண்டுபிடிங்க -
பாஸ்போர்ட் இல்லாமல் உலகின் எந்த நாட்டுக்கும் பயணிக்கும் அந்தஸ்து உள்ள சக்திவாய்ந்த 3 பேர் யார் தெரியுமா? -
2 கப் ஜவ்வரிசி இருந்தா.. தீபாவளிக்கு 10 நிமிஷத்துல ஸ்வீட், கார மிக்சர் செய்யலாம்.. எப்படின்னு பாருங்க.. -
3/4 கப் உளுந்து இருந்தா இந்த தால் மகாராணியை செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
தீபாவளி பட்டாசு புகையால் கண் எரிச்சல், சரும அலர்ஜி, மூச்சுத்திணறலா? பாதுகாப்பாக இருக்க டாக்டர் கூறும் டிப்ஸ்! -
18 ஆண்டுகள் கழித்து மகரம் செல்லும் ராகு: இந்த 3 ராசிக்கு தொழில் வளரும், பணம் பெருகும்.. உங்க ராசி என்ன? -
செக் எழுதும்போது ஏன் தொகைக்கு பக்கத்தில் 'ONLY' என்று எழுதுகிறோம் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
பேச்சுலர்களுக்கான ஈஸியான தக்காளி குழம்பு
மதிய வேளையில் சாதத்திற்கு நன்கு காரமாகவும் மிகுந்த சுவையாகவும் இருக்கும் குழம்பு செய்து சாப்பிட நினைத்தால் தக்காளி குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த தக்காளி குழம்பு பேச்சுலர்கள் செய்து சாப்பிடும் வகையில் செய்வதற்கு மிகவும் சிம்பிளாக இருக்கும். மேலும் இந்த குழம்பு ஆரோக்கியமானது என்றும் சொல்லலாம். ஏனெனில் தக்காளியில் உள்ள அமிலம், புற்றுநோயை அண்ட விடாமல் தடுப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
சரி, இப்போது அந்த தக்காளி குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
தக்காளி - 4 (அரைத்தது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
அரைப்பதற்கு...
கிராம்பு - 3
பட்டை - 1
சோம்பு - 1/4 டீஸ்பூன்
கசகசா - 1/2 டீஸ்பூன்
மல்லி - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 3 பற்கள்
இஞ்சி - 1 இன்ச்
துருவிய தேங்காய் - 1/2 கப்
தக்காளி - 2 (பெரியது)
செய்முறை:
முதலில் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள தக்காளி, கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பிறகு அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து கிளறி, அத்துடன் மிளகாய் தூள், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு 10-15 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், காரமான தக்காளி குழம்பு ரெடி!!!
Image Courtesy: malluspice



Click it and Unblock the Notifications
