Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
கார போளி

தேவையான பொருட்கள்:
மைதா மாவு - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 4
வெங்காயம் - 2
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
எலுமிச்சை பழச்சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் போட்டு, நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். பிறகு அதனை தோல் உரித்து, கட்டியின்றி பிசையவும். வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பின் அந்த பிசைந்த உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதோடு வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை பழச்சாறு, உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு, அதில் உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு போல பிசைந்து, ஒரு மணி நேரம் மூடி ஊற வைக்கவும். பின் ஊறிய மாவில் ஒரு கால் கப் எண்ணெய் சேர்த்து, மாவு எண்ணெயை உறிஞ்சும் வரை நன்கு மென்மையாக பிசையவும்.
பின் அந்த மைதா மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போல் செய்து , அதன் நடுவில் அந்த உருளைக்கிழங்கு கலவையை வைத்து, நான்கு புறமும் மூடி, மறுபடியும் சப்பாத்தி போல் தேய்க்கவும். அவ்வாறு தேய்க்கும் போது கவனமாக தேய்க்க வேண்டும். முக்கியமாக அழுத்தி தேய்க்க கூடாது. இல்லையெனில் உருளைக்கிழங்கு கலவை வெளியே வந்துவிடும்.
இப்போது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி தேய்த்த போளிகளை போட்டு, இரண்டுபுறமும் எண்ணெய் ஊற்றி திருப்பிப் போட்டு நன்கு வேக வைத்து சுட்டெடுக்கவும்.
இதோ சுவையான கார போளி ரெடி!!!



Click it and Unblock the Notifications
