Latest Updates
-
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்!
காரமான... பன்னீர் டிக்கா மசாலா
பன்னீர் ரொம்ப பிடிக்குமா? பன்னீரை கொண்டு வித்தியாசமாக என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியெனில் தமிழ் போல்ட் ஸ்கை உங்களுக்காக கொடுத்துள்ள பன்னீர் டிக்கா மசாலாவை முயற்சி செய்து பாருங்கள். இது மிகவும் ஈஸியான ரெசிபி. மேலும் சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்.
பேச்சுலர்கள் கூட ட்ரை செய்து பார்க்கலாம். சரி, இப்போது அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பன்னீர் - 250 கிராம்
தயிர் - 1 கப்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
முந்திரி பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
டிக்கா மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
சன்னா மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பன்னீரை சதுரங்களாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மசியுமாறு வதக்க வேண்டும்.
பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பிறகு அதில் டிக்கா மசாலா சேர்த்து 3 நிமிடம் கிளறி, அதனைத் தொடர்ந்து சாட் மசாலா மற்றும் சன்னா மசாலா சேர்த்து குறைவான தீயில் கிளறி விட வேண்டும்.
பின் தயிரை ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
அடுத்து நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து, 10 நிமிடம் நன்கு வேக வைத்து, இறுதியில் முந்திரி பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, குறைவான தீயில் சிறிது நேரம் (பச்சை வாசனை போகும் வரை) வேக வைத்து இறக்கினால், நல்ல காரமான பன்னீர் டிக்கா மசாலா ரெடி!!!



Click it and Unblock the Notifications
