Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
கார குழிப் பணியாரம்
பணியாரத்தில் நிறைய உள்ளன. பெரும்பாலும் கிராமப் பகுதிகளில் இனிப்புப் பணியாரம் அதிகம் விற்கப்படும். இது உடலுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதுவும் இட்லி போன்று, ஆவியில் வேக வைத்து சமைப்பது. மேலும் குழந்தைகளுக்கு பணியாரம் மிகவும் பிடிக்கும். இதனை காலை அல்லது மாலை வேளையில் கூட செய்து சாப்பிடலாம்.
இப்போது அந்த பணியாரத்தில் கார குழிப் பணியாரத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தோசை/இட்லி மாவு - 3 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 சிட்டிகை
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)
கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தோசை/இட்லி மாவுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உளுத்தம் பருப்பு, மிளகாய் தூள், பெருங்காயத் தூள், துருவிய தேங்காய், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஒவ்வொரு குழியிலும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி, இரண்டு புறமும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும்.
இதேப் போன்று அனைத்து மாவையும் சுட்டு எடுக்க வேண்டும். இப்போது சுவையான கார குழிப் பணியாரம் ரெடி!!!



Click it and Unblock the Notifications
