Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
சேமியா வெஜிடேபிள் கிச்சடி

தேவையான பொருட்கள்:
சேமியா - 1 கப்
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது)
கேரட் - 1 (நறுக்கியது)
பீன்ஸ் - 4 (நறுக்கியது)
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 5
பிரியாணி இலை - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து நீரை கொதிக்க விடவும். அதே சமயம் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சேமியாவை பொன்னிறமாக வறுத்து, கொதிக்கும் நீரில் அந்த சேமியாவைப் போட்டு, 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, இறக்கி மூடி தனியாக வைத்து கொள்ளவும். (முக்கியமாக சேமியா குலைந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்.)
பின் நீரை வடித்து, ஒரு தட்டில் அந்த சேமியாவை பரப்பி, குளிர வைக்கவும். பின் மற்றொரு வாணலியில் நீரை ஊற்றி, அதில் நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை போட்டு, வேக வைத்துக் கொள்ளவும்.
பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளிக்கவும்.
பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதோடு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர் அதில் வேக வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு, மசாலா அனைத்தும் ஒன்று சேரும் வரை நன்கு கிளறவும்.
மசாலா அனைத்து காய்கறிகளுடன் ஒன்று சேர்ந்ததும், அதில் சேமியாவைப் போட்டு கிளறி, தீயை குறைவில் வைத்து, தட்டால் வாணலியை மூடி 5 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.
இப்போது சுவையான சேமியா வெஜிடேபிள் கிச்சடி ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி, தயிருடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
