Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
கேழ்வரகு ஸ்டப்டு இட்லி
இட்லி என்றால் அரிசி, உளுந்து போட்டு அரைத்து எப்பொழுதும் ஒரே மாதிரியாகத் தான் செய்கின்றோம். அதற்கு பதிலாக சற்று வித்தியாசமாக, அதே சமயம் ஆரோக்கியமான ஒரு இட்லியை செய்து சாப்பிட நினைத்தால் கேழ்வரகு ஸ்டப்டு இட்லியை செய்யுங்கள்.
இங்கு அந்த கேழ்வரகு ஸ்டப்டூ இட்லியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

தேவையானப் பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 1/2 கிலோ
உளுந்து - 200 கிராம்
கொண்டைக்கடலை - 100 கிராம்
வெல்லம் - சிறிதளவு
வரமிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுத்ததாக கேழ்வரகு மாவில் உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரந்துக் கொள்ளவேண்டும்.
பிறகு இந்த இரண்டு கலவையையும் ஒன்றாக சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை முதல் நாள் இரவே செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் அதனை வேக வைத்து வடிகட்டி அத்துடன் மிளகாய், வெல்லம், உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் அரைத்து வைத்து கொள்ள வேண்டும்.
இறுதியாக, இட்லித் தட்டில் எண்ணெய் தடவி முதலில் கேழ்வரகு, உளுந்து மாவு கலவையை 1/2 கரண்டி விட்டு அதன் மேல் 1/4 கரண்டி கொண்டைக்கடலை கலவையை விட்டு, மீண்டும் கேழ்வரகு, உளுந்து மாவு கலவையை 1/4 கரண்டி விட்டு இட்லியை வேக வைத்து எடுத்தால் சுவையான கேழ்வரகு ஸ்டப்டு இட்லி ரெடி....



Click it and Unblock the Notifications