Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
சுவையான...பன்னீர் பரான்தா

தேவையான பொருட்கள் :
பன்னீர் - 200 கிராம்
வெங்காயம் 1
குடைமிளகாய் 1
பச்சை மிளகாய் 2
இஞ்சிபூண்டு விழுது 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் 12 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
பரான்தாவிற்கு...
மைதா 2 கப்
தண்ணீர் 1 கப்
நெய் 1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை :
முதலில் மைதா மாவை ஒரு பௌலில் போட்டு, அதில் சிறிது தண்ணீர் விட்டு, பின் சிறிது உப்பையும், நெய்யையும் சேர்த்து நன்கு மென்மையாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு வெங்காயம், குடைமிளகாய், பச்சைமிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் பன்னீரை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு நன்கு வெடித்தவுடன், அத்துடன் இஞ்சிபூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின் சிறிது மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கவும். துருவிய பன்னீரைப் போட்டு நன்கு கலக்கவும். மசாலாவானது பன்னீருடன் நன்கு சேர்ந்தவுடன் அதனை இறக்கி வைத்து விடவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பின் ஒவ்வொரு உருண்டைகளையும் தேய்த்து, சப்பாத்தி செய்து கொள்ள வேண்டும்.
பின் அந்த சப்பாத்தியில் அந்த மசாலாவை நடுவில் வைத்து, அதன் மேல் நறுக்கிய சிறிது வெங்காயத்தை தூவி, பின் தக்காளி சாஸை அதன்மேல் விட்டு சுருட்டவும். இப்போது சுவையான பன்னீர் பரான்தா ரெடி!!!



Click it and Unblock the Notifications
