Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா? -
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
வார ராசிபலன் (19 April 2026 - 25 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றும் 3 கிரகங்கள்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
வெயிலால் முகம் டல்லாகிடுச்சா? அப்ப 1 ஸ்பூன் அரிசி மாவு வெச்சு தினமும் நைட் இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க அட்சய திருதியை நாளில் என்ன வாங்கணும்-ன்னு சொல்றோம். .. -
நாவூறும்.. சேலத்து மாங்காய் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க..
பாலக் டோஃபு
டோஃபு என்பது பன்னீர் போன்றது. ஆனால் பன்னீர் பால் கொண்டு செய்யப்படுவதோடு, டோஃபு சோயா பால் கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இது அனைத்து கடைகளிலும் கிடைக்கும். இதனை பசலைக்கீரையுடன் சேர்த்து கிரேவி செய்து, சப்பாத்தியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
இங்கு இந்த பாலக் டோஃபு எப்படி எளிமையாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - 3 இன்ச்
பிரியாணி இலை - 1
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 2 டீஸ்பூன்
டோஃபு - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
தண்ணீர் - தேவையான அளவு
பால் - 1/2 கப்
சோள மாவு - 1 டீஸ்பூன்
பசலைக்கீரை சமைக்க...
பசலைக்கீரை/பாலக் - 4 கப் (நறுக்கியது)
பூண்டு - 2 பற்கள்
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
தண்ணீர் - 1/2 கப்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் பசலைக்கீரை, பூண்டு, பச்சை மிளகாய், 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 5-7 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். பசலைக்கீரை நன்கு வெந்ததும், அதனை இறக்கி மத்து கொண்டு நன்கு கடைந்து கொள்ளலாம் அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளலாம்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்பு அதில் மசாலாப் பொடிகள் அனைத்தையும் சேர்த்து கிளறி, பின் அரைத்து வைத்துள்ள பசலைக்கீரையை சேர்த்து கிளறி, 5-8 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
பிறகு அதில் தண்ணீர் ஊற்றி கிரேவி போன்று செய்து, பின் அதில் டோஃபுவை சேர்த்து கிளறி, தேவையான அளவு உப்பு போட்டு மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
பின் பாலில் சோளமாவை சேர்த்து கலந்து, கிரேவியுடன் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், பாலக் டோஃபு ரெடி!!!



Click it and Unblock the Notifications











