Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
அட்டகாசமான வாழைக்காய் புளி கூட்டு ரெசிபி: ட்ரை பண்ணி பாருங்க - சூப்பரா இருக்கும்
Vazhakkai Puli Kootu Recipe in Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வாழைக்காய் பிடிக்குமா? இதனால் அடிக்கடி உங்கள் வீட்டில் வாழைக்காய் செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் வாழைக்காயை செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை அந்த வாழைக்காயைக் கொண்டு அருமையான கூட்டு செய்யுங்கள்.

அதுவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு வாழைக்காயை புளி கூட்டு செய்தால், பின் எப்போதும் இப்படி தான் வாழைக்காயை சமைப்பீர்கள். அந்த அளவிற்கு இந்த வாழைக்காய் புளி கூட்டு ருசியாக இருக்கும். முக்கியமாக இந்த வாழைக்காய் புளி கூட்டுசாதத்திற்கு சைடிஷாக மட்டுமின்றி இதை சாதத்தில் போட்டு சாப்பிடவும் அருமையாக இருக்கும். இந்த வாழைக்காய் புளி கூட்டு சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
உங்களுக்கு வாழைக்காய் புளி கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழெ வாழைக்காய் புளி கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- வாழைக்காய் - 1
- துவரம்பருப்பு - 1½ ஸ்பூன்
- புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
- சாம்பார் பொடி - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1/2 ஸ்பூன்
- துருவிய தேங்காய் - 1 ஸ்பூன்
- பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
- தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்
செய்முறை:
- துவரம் பருப்பை நன்றாக வேகவைத்து, தனியாக எடுத்து வைக்கவும்.
- வாழைக்காயைச் சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி, சாம்பார் பொடி, உப்பு மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து வேகவிடவும்.
- வாழைக்காய் வெந்ததும், அதில் புளிக்கரைசல் மற்றும் வேகவைத்த துவரம்பருப்பைச் சேர்த்து, சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
- நன்கு கொதித்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் மற்றும் துருவிய தேங்காய் ஆகியவற்றைத் தாளிக்கவும்.
- தேங்காயை பொன்னிறமாக நன்கு வறுத்து, தாளித்த பொருட்கள் அனைத்தையும் கூட்டுடன் சேர்த்து நன்கு கிளறவும்.
- இறுதியாக, கூடுதல் சுவைக்காக ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.
- அவ்வளவுதான் சுவையான வாழைக்காய் புளி கூட்டு ரெடி. இதை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம், இல்லையெனில் சாம்பார் அல்லது ரசம் சாதத்திற்கு சைடிஷாக வைத்து சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications