Latest Updates
-
மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு சர்க்கரை நோய் அபாயம் ஏன் அதிகரிக்கிறது? -
100 மனைவிகளுக்கு மேல் வைத்திருந்த மன்னர்களின் லிஸ்ட் - எந்தெந்த இந்திய ராஜாக்கள் இதில் இருக்கிறார்கள் தெரியுமா -
வீட்டுல முருங்கைக்காய் இருந்தா.. இப்படி ஒருடைம் ரசம் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க எல்லோரையும் மயக்கும் வசீகரம் கொண்டவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மழைக்காலத்தில் பணவரவு குறையாமல் இருக்கணுமா? மணி பிளாண்ட் வைப்பதில் இந்தத் தவறுகளை மட்டும் செய்யாதீங்க! -
உடல் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப உணவியல் நிபுணர் சொல்ற இந்த 6 பானங்களை காலையில் குடிங்க.. -
ராகு நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் இட்லி மாவு இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. சைடு டிஷ்ஷே தேவைப்படாது.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூன் 2026: ஜூன் மாத முதல் நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
தம்பதிகள் இணைந்து புகையிலையை கைவிடுவது எப்படி? உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக இன்று ஒரு உறுதிமொழி எடுங்கள்!
கொங்குநாடு தக்காளி சட்னி - 10 நிமிடத்தில் டக்குன்னு எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க!
Kongunadu Thakkali Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலை வேளையில் இட்லி தான் காலை டிபனாக இருக்குமா? அந்த இட்லிக்கு எப்பவும் சட்னி தான் செய்வீர்களா? அதுவும் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு இட்லிக்கு சற்று புளிப்பான சுவையில் சட்னி இருந்தால் ரொம்ப பிடிக்குமா? இதனாலேயே அடிக்கடி உங்கள் வீட்டில் தக்காளி சட்னியை செய்வீர்களா?
தக்காளி சட்னியை ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு விதத்தில் செய்வார்கள். அதுவும் கொங்குநாடு ரெசிபிக்களின் சுவையே தனித்துவமாக இருக்கும். கொங்குநாட்டு பக்கம் உள்ள வீடுகளுக்கு சென்றால், வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தாலே சட்டென்று அவர்கள் ஸ்டைலில் தக்காளி சட்னியை தயார் செய்து பரிமாறுவார்களாம். இந்த கொங்குநாடு ஸ்டைல் தக்காளி சட்னி சற்று வித்தியாசமான சுவையில் அருமையாக இருக்கும்.

இந்த கொங்குநாடு தக்காளி சட்னி குறித்து அனிதாஸ் ஹெல்த்தி கிச்சன் என்னும் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த கொங்குநாடு தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்குநாடு தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தக்காளி - 5
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 6-7 (பொடியாக நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 1 கையளவு (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 3/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் 5 தக்காளியை
சேர்த்து அடுப்பில் வைத்து 5 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து,
தக்காளியின் தோல் உரியும் நிலைக்கு வந்ததும், அதை இறக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் தக்காளியை மட்டும் எடுத்து மிக்சர் ஜாரில்
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பிறகு அதில் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பூண்டு பற்களை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பச்சை
மிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயத் தூள்,
சாம்பார் தூள் சேர்த்து சில நொடிகள் நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து, தேவையான அளவு
நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் நன்கு பச்சை
வாசனை போக கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* இறுதியாக கொத்தமல்லியைத் தூவி பரிமாறினால், சுவையான கொங்குநாடு
தக்காளி சட்னி தயார்.



Click it and Unblock the Notifications