Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
அருமையான... காளான் சில்லி

தேவையான பொருட்கள் :
காளான் - 500 கிராம்
வெங்காயம் - 2
குடைமிளகாய் - 1
வெங்காயத்தாழ் - 1
பச்சை மிளகாய் - 4-6
இஞ்சிபூண்டு விழுது - 2-3 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 2-3 டேபிள் ஸ்பூன்
கார்ன் ஃப்ளார் - 1 டேபிள் ஸ்பூன்
வினிகர் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் காளானை நன்கு சுத்தமாக கழுவி, சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய், வெங்காயத் தாழ் போன்றவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
பின் வெங்காயத்தை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். மேலும் அத்துடன் இஞ்சிபூண்டு விழுதையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடேற்றவும். பின் அதில் அரைத்த வெங்காய கலவையை சேர்த்து வதக்கவும்.
பிறகு அதில் நறுக்கிய குடைமிளகாய், பச்சை மிளகாய், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து 2-3 நிமிடம் வதக்கவும்.
பின் அதனுடன் வினிகர் மற்றும் சோயா சாஸை ஊற்றி கிளறவும். இனிப்புச் சுவை வேண்டுமென்றால், அதோடு தக்காளி சாஸை ஊற்றி 1 நிமிடம் கிளறவும்.
பிறகு கார்ன் ஃப்ளாரை தண்ணீரில் கரைத்து அதில் ஊற்றி, கெட்டியான கிரேவி போல் வரும் வரை நன்கு கொதிக்க வைக்கவும். பின் அதில் நறுக்கிய காளான் துண்டுகளை போட்டு, நன்கு கிளறி கிரேவியானது காளானில் இறங்கும் வரை 1-2 நிமிடம் வேக வைக்கவும்.
இப்போது சுவையான, அருமையான காளான் சில்லி ரெடி!!! இதன்மேல் நறுக்கிய வெங்காயத் தாழை தூவி பரிமாறலாம்.



Click it and Unblock the Notifications
