Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
துவரம் பருப்பு கிச்சடி
பொதுவாக மதிய வேளையிலும் சரி, காலையிலும் சரி பெரும்பாலானோர் கலவை சாதம் செய்து, அத்துடன் ஏதேனும் சைடு டிஷ்களை செய்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பர். அவ்வாறு நினைப்பவர்களுக்கு கிச்சடி சரியானதாக இருக்கும்.
அதிலும் கிச்சடியில் நிறைய வகைகள் உள்ளன. இப்போது அவற்றில் ஒன்றான துவரம் பருப்பை வைத்து எப்படி ஒரு ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த ஒரு கிச்சடியை செய்வதென்று பார்ப்போமா!!!

அரிசி - 1 கப் (ஊற வைத்து, கழுவியது)
துவரம் பருப்பு - 1 கப் (ஊற வைத்து கழுவியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
வர மிளகாய் - 2
பிரியாணி இலை - 1
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
கேரட் - 1 (நறுக்கியது)
பீன்ஸ் - 10 (நறுக்கியது)
கத்திரிக்காய் - 100 கிராம் (நறுக்கியது)
பட்டாணி - 100 கிராம்
இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி சூடேற்ற வேண்டும்.
பின் அதில் சீரகம், வர மிளகாய், பச்சை மிளகாய், பிரியாணி இலை போட்டு, தாளிக்க வேண்டும்.
அடுத்து, அத்துடன் துருவிய இஞ்சி சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள அனைத்து காய்கறிகளையும் போட்டு சிறிது நேரம் வதக்க வேண்டும்.
பிறகு கழுவி வைத்துள்ள அரிசி மற்றும் துவரம் பருப்பு போட்டு, 2 நிமிடம் கிளற வேண்டும்.
பின்பு நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், சீரகப் பொடி மற்றும் கரம் மசாலா சேர்த்து 3-4 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
இறுதியில் 3 கப் தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி கொதித்ததும், குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான துவரம் பருப்பு கிச்சடி ரெடி!!! இதனை தயிர் பச்சடியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
