Latest Updates
-
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
மிக்ஸ்டு வெஜிடேபிள் சாம்பார்
தமிழ் புத்தாண்டிற்கு வீட்டில் சாம்பார், பொரியல், வடை, பாயாசம் என்று பலவற்றை செய்து சாப்பிடுவோம். அப்படி சாம்பார் செய்யும் போது, அதனுடன் பல்வேறு காய்கறிகளை சேர்த்து செய்து சாப்பிடுங்கள். இதனால் சாம்பார் மிகவும் சுவையுடன் இருப்பதோடு, ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
இப்போது அந்த மிக்ஸ்டு வெஜிடேபிள் சாம்பார் ரெசிபியின் செய்முறையை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1/4 கப்
புளி - 1 எலுமிச்சை அளவு
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கத்திரிக்காய் - 1 (நறுக்கியது)
முருங்கைக்காய் - 1 (நறுக்கியது)
முள்ளங்கி - 1 (நறுக்கியது)
கேரட் - 1 (நறுக்கியது)
பீன்ஸ் - 3 (நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது)
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
முதலில் துவரம் பருப்பை சுடுநீரில் 20 நிமிடம் ஊற வைத்து, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின்னர் புளியை 1 1/2 கப் சுடுநீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வரமிளகாய், பெருங்காயத் தூள், வெந்தயம், கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு சிறிது நேரம் வதக்க வேண்டும்.
பின் அதில் புளி நீர், மஞ்சள் தூள், உப்பு மற்றும் சாம்பார் பொடி சேர்த்து, மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும். இதற்கு குறைந்தது 10 நிமிடம் ஆகும்.
எனவே அதற்குள் குக்கரை மற்றொரு அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, தண்ணீர் ஊற்றி, பின் ஒரு பௌலில் காய்கறிகளை போட்டு, குக்கரில் வைத்து, 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பிறகு துவரம் பருப்பை லேசாக மசித்து, வாணலியில் ஊற்றி, பின் அத்துடன் காய்கறிகளையும் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், மிக்ஸ்டு வெஜிடேபிள் சாம்பார் ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications
