Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
மினி பெப்பர் இட்லி
பெரும்பாலானோர் காலை உணவாக இட்லியைத் தான் சாப்பிடுவார்கள். நீங்கள் அப்படி எப்போதும் ஒரே மாதிரி இட்லியை சாப்பிடுபவர்களாக இருந்தால், இந்த முறை மினி பெப்பர் இட்லியை முயற்சித்துப் பாருங்கள். இந்த மினி பெப்பர் இட்லிக்கு எந்த ஒரு சைடு டிஷ்ஷும் தேவையில்லை. மேலும் இந்த மினி பெப்பர் இட்லியானது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
சரி, இப்போது அந்த மினி பெப்பர் இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
மினி இட்லி - 12
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு...
மிளகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 டீஸ்பூன்
பூண்டு - 1/2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
முதலில் இட்லி மாவைக் கொண்டு மினி இட்லிகளை சுட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்து, அம்மி அல்லது மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் குடைமிளகாயை சேர்த்து, அத்துடன் அரைத்து வைத்துள்ள பொடி, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து 3 நிமிடம் நன்கு பிரட்டி, பின் மினி இட்லிகளை சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து மீண்டும் பிரட்டி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், மினி பெப்பர் இட்லி ரெடி!!!
குறிப்பு:
வேண்டுமானால் மினி இட்லிக்கு பதிலாக சாதாரண இட்லியைக் கொண்டும் இதனை செய்யலாம். அதற்கு சாதாரண இட்லிகளை சுட்டு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications