Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
மசாலா ஓட்ஸ் ரெசிபி
தற்போது டயட்டில் இருப்போர் காலையில் ஓட்ஸை தான் பெரும்பாலும் சாப்பிடுகிறார்கள். அதிலும் வெறும் பால் ஊற்றி தான் சாப்பிடுவார்கள். ஆனால் இங்கு அந்த ஓட்ஸை எப்படி உப்புமா போன்று செய்து சாப்பிடுவது என்று கொடுத்துள்ளோம்.
அதைப் படித்து செய்து பார்த்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 2 கப்
வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
கேரட் - 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் - 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் - 1/2 (நறுக்கியது)
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் குக்கரில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு, சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, 1 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு 2-3 நிமிடம் மிதமான தீயில் வதக்க வேண்டும்.
பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் அதில் தக்காளியை, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கி, அத்துடன் வேக வைத்துள்ள காய்கறிகளை நீருடன் சேர்த்து ஊற்றி ஒரு கொதி விட்டு, பின் அதில் ஓட்ஸை சேர்த்து 5 நிமிடம் தண்ணீர் வற்றும் வரை வேக வைத்து இறக்கினால், சுவையான ஓட்ஸ் மசாலா ரெடி!!!



Click it and Unblock the Notifications
